சனி, 16 அக்டோபர், 2010

அண்ணன்கள் 'வினவு.. வினை செய்'யிடம் ஒரு கேள்வி

நேற்றைய பதிவிலிருந்து என்ன விசயமென்று புரியவில்லை. இன்று எல்லாம் புரிகிறது.இதை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நீங்கள் வருந்த வேண்டாம்.

சாந்தி எழுதிய கட்டுரை வினவில் வந்து அதற்கு நீங்கள் பின்னூட்டம் போட்டதுதான் இவர்களுக்கு ஆத்திரத்தை வரவழைத்திருக்கிறது. ஆனால் வினவில் வாலாட்ட முடியாத இந்த ஜென்மங்கள் அப்பாவியான உங்களை அவர்களது சித்திரவதைக்கூடத்தில் வைத்து கடித்திருக்கிறார்கள்.

நல்லது யார் கடித்த்து என்பதை அடையாளம் காட்டிவிட்டீர்கள்.உரிய நேரத்தில், இடத்தில் இந்த பிரச்சினைக்கு முடிவு காணும் உங்களுக்கு வினவு என்றும் தோள் கொடுக்கும்.

இந்த நீல எழுத்தில் உள்ளவைகள் நாடோடி என்பவரின் பதிவில் தாங்கள் (வினவு) இட்ட பின்னூட்டம்.

என்னால் அந்த இடத்தில் தங்களுடன் பின்னூட்டங்களால் விவாதிக்க முடியவில்லை. ஏன் அண்ணன் நாடோடி அவர்களுடனே விவாதிக்க முடியவில்லை. மட்டறுத்தல் போட்டு.. அப்படியே தடுத்து விடுகிறார்.

அவர் வலைப்பதிவு. அவர் விருப்பம்.


உங்களுக்கான கேள்விகள்: அந்த பதிவை படித்து விட்டு பின்னூட்டம் போட்டீரா அல்லது படிக்காம போட்டீரா? ஏனெனில் என் கண்களுக்கு பட்ட சில முரண்கள் உங்களுக்கு படாதது ஏன்? நான் வலைப்பதிவில் நிரம்பி வழியும் பல அரைவேக்காடுகளில் ஒருவன் அல்ல. சில கால்வேக்காடுகளில் ஒருவன். எனக்கே ஒரு தடவை படித்ததற்கே தெரியுதே.. அவ்வ் உங்களுக்கு படவில்லையா?

ஆனால் விஷயம் முழுவதும் உணர்ந்ததாக சொல்கிறீர்கள். எப்படி? என்ன நடந்தது என்று முழுவதுமாக தெரியுமா!! ஒருவேளை எப்பொழுதும் போல் உங்க பார்வைகளுக்கு ஆதாரம் தருவிக்கப்பட்டிருந்தால்.. அது முழுமையானதா என விசாரித்து விட்டு தான் பின்னூட்டம் போட்டீரா?

அவ்வளவு தான் கேள்விகள்.

அடுத்து வெளியிடப்படாத என் பின்னூட்டங்கள்:

~//உல‌கில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக‌ளுக்கு எல்லாம் என்னிட‌ம் க‌ருத்து கேட்பார்க‌ள் போல் இருக்கிற‌து...//

உலகில் நடக்கும் அனைத்திற்கும் உங்களை கேள்விகள் கேட்பது மாபெரும் தவறு. அதற்கு என் கண்டனங்கள்.

//இந்த சாக்கடை அனுபவத்திலிருந்து இந்த சாக்கடையை எழுத்துக்களால் உற்பத்தி செய்யும் மனித விலங்குகளை நாம் என்றைக்கு வெளியேற்றுகிறோமோ அன்றுதான் இணையம் உற்சாகமானதாக இருக்குமென்று தோன்றுகிறது. அந்த சுத்தப்படுத்தும் வேலையை நண்பர்களின் உதவியுடன் தொடர்ந்து செய்வேன்.//

ஆனால் நீங்க யாரோ ஒரு நபர் அல்ல. இணைய தமிழ்ச் சூழல் தூய்மையாய், உற்சாகமாய் இருக்க வேண்டும் என அதன் மேல் மட்டற்ற காதல் கொண்டவர். அப்புறம் உங்ககிட்ட கேட்காம.. என்கிட்டயா கேட்பாங்க? எனது கண்டங்களை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.

பின்னூட்டங்கள் வெளியிட்டதற்கு நன்றி!! ~


மூன்றாம் பின்னூட்டம் முற்றிற்று.

'தொடர்ந்து' என்ற வார்த்தையின் மூலம் நாடோடி தனக்கு சுத்தப்படுத்தும் வேலை புதிதல்ல என தெளிவாக சொல்லியுள்ளார். மனித விலங்குகளை அகற்ற வேண்டுமென நல்லெண்ணத்தால் உந்தப்பட்டு.. நாடோடி அண்ணன் முகிலன் அண்ணனை கேள்விகள் கேட்டார். அது தொடர்பான சங்கிலி பிரச்சனையில் இருந்து முகிலன் அண்ணன் கேள்வி கேட்டால், 'உலகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு எல்லாம் என்னிடம் கருத்து கேட்கிறார்கள்' என அங்கலாய்த்து கொள்கிறார். நழுவுகின்ற மீனாக இருக்கும் அண்ணன் நாடோடி எப்படி நண்பர்களின் உதவியுடன் சுத்தம் செய்வார்? சுத்தம் செய்ய சாக்கடையில் இறங்க வேண்டியிருக்கும் அல்லவா ஆனால் நாடோடி அண்ணன் கரையேறி விட்டார்.


//ப‌திவ‌ர் சாந்தி அவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னை முகில‌ன் ம‌ட்டும் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌து அல்ல‌, அது இரும்புத்திரை அர‌விந்த், ம‌ற்றும் ப‌திவ‌ர் ம‌தார் அவ‌ர்க‌ளும் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌து என்ப‌தும் என‌க்கு தெரியும், ஆனால் அர‌விந்த் ம‌ற்றும் ம‌தார் என‌க்கு அறிமுக‌ம் இல்லாத‌வ‌ர்க‌ள்,... என‌வே அவ‌ர்க‌ளை ப‌ற்றிய‌ புரித‌ல் என‌க்கு இல்லாத‌தால் எந்த‌வொரு இட‌த்திலும் இவ‌ர்க‌ளை ப‌ற்றி நான் பேசிய‌து கிடையாது..//

வினவின் வாசகன் என்ற முறையில் இந்த பத்தியில் இருந்து சில சந்தேகங்கள். நாடோடி அண்ணன் மாதர் என்ற பெண்ணின் அறிமுகம் இல்லை என சொல்லியுள்ளார். ஆனால் குழுமத்தில் அந்த பெண்ணிடம் ஒருமையில், "எனக்கு உன் மேல் மரியாதை இல்லை. விவாதம் புரிய விருப்பமில்லை" என்கிறார். "பிறகு எதன் அடிப்படையில் நான் சொன்னது புரளி என்று சொன்னீர்கள்?" என மீண்டும் மதார் கேட்கிறார். 'என்னை வீணாக சீண்டினால்.. பின் விளைவுகள் மோசமாக இருக்கும்' என்று சொல்கிறார். முன் பின் அறிமுகம் இல்லை என சொல்லும் அவர்.. ஒருமையில் ஒரு பெண்ணிடம் இப்படி பொதுவெளியில் பேசுவது எந்த ஆதிக்கத்தின் கீழ் வருகிறது!! நாடோடி அண்ணனுக்கு எப்படி பொதுவில் பெண்களிடம் பேச வேண்டும் என சொல்லிக் கொடுங்கள். உருக்கமாக பதிவு எழுதி விட்டால் மட்டும் போதாது.

முகிலன்.. அரவிந்த்.. மதார்.. அருள் ஸ்டீபன் (நாடோடி) என பிரச்சனையுடன் சம்பந்தப்பட்ட நால்வர் மட்டும் அக்டோபர் 11 அன்று பேசிக் கொள்கிறார்கள். கவனிக்கவும் பேசிக் கொள்கிறார்கள். அந்த சமயத்தில், "உன்னால‌ ஆன‌த‌ பாருடா... வெத்துவேட்டு.. சும்மா குரைக்காதே.... " என இனிதே சண்டையினை ஆரம்பிக்கிறார் நாடோடி அண்ணன். சரியாக நண்பகல் மணி 12:08. சும்மா இருந்தவரை யாரும் எதுவும் சொல்லி விடவில்லை. நாடோடி அண்ணன் பதிவில் சொன்னது போல் குழுமத்தில் உள்ளவர்கள் யாரும் வன்மம் கொண்டு தகாத வார்த்தைகளை அவர் மீது உபயோக்கிக்கவில்லை. அவர் தொடங்கினார். பதிலுக்கு அரவிந்த் அண்ணன். உடனே அரவிந்த்க்கு கண்டனங்கள் வந்தன. ஆனால் விவாதத்தின் போக்கை மாற்றிய மதிப்பிற்குரிய நாடோடி அண்ணன் மீது ஒரு சின்ன கண்டனம் கூட இதுவரை யாருமே சொல்லவில்லை. நாடோடி அண்ணன் பெற்றது அனுதாபங்களை மட்டுமே!!


~அண்ணா.. தனி மனித பிரச்சனையில் ஒரு குழுமத்தையே குற்றம் சாட்டியதற்கு என் கண்டனங்கள். அங்குள்ள 200 பேரும் சாக்கடையில் உள்ளவர்கள் என்று பொதுப்படையாக சொல்கிறீர்கள். தங்களை போல் மன உளைச்சல் அதிலுள்ள ஒருவருக்கு கூட வராதா? 200 பேரில் எத்தனை நபர்கள் குழுமத்திற்கு வரும் அத்தனை மின்னஞ்சல்களையும் படிக்கிறார்கள். படிக்காமலே குப்பைத் தொட்டிக்கு தள்ளுபவர்கள் தான் அதிகம். அந்த 200 பேரில் எவரேனும் 2 நாள் ஊரிற்கு கூட சென்றிருக்கலாம். 200 பேரில் இணையம் வாரமொரு முறை, மாதமொரு முறை உபயோகப்படுத்துபவர்கள் உள்ளார்கள். அனைவரையும் சேர்த்து சாக்கடை ஆக்கி விட்டீர்கள்.

ஒரிருவர் தான் கண்டனம் சொல்லியுள்ளதாக சொல்லியுள்ளீர்கள். அடுத்த நொடியே தினேஷ் குமார்(முகிலன்).. ஜானகிராமன், மணீஜி.. இரவு கேபிள்ஜி என தங்கள் சார்பாக பேசி கண்டனம் அளித்தது எல்லாம் தங்கள் பார்வைக்கு வரவில்லையா?~

எனது இரண்டாம் பின்னூட்டம் முற்றிற்று.

விவாதம் பண்ண முடியாமலோ, விருப்பம் இல்லாமலோ.. முதலில் உணர்ச்சி வசப்பட்டது நாடோடி அண்ணன். ஆனால் குழுமத்தில் உள்ளவர்கள் அனைவரும் வாந்தி எடுக்கிற மேதாவிகள் என்ற ரீதியில் அவர் பதிவு எழுதியுள்ளார். நான் இங்கு ஆதாரங்கள் என்று எதையும் வைக்கவில்லை. இந்த பதிவின் ஆணி வேர் ஆதாரங்கள் அனைத்தும் குழும விவாத பக்கங்களில் அப்படியே உள்ளன. விருப்பமுள்ளவர்கள் உறுப்பினராகி பார்த்துக் கொள்ளலாம். எனக்கு சாதகமானவற்றை COPY PASTE செய்யும் சின்ன புத்தி இல்லை என்பதையும் பதிந்துக் கொள்கிறேன்.

குழுமம் என்பது இயக்கம் அல்ல. ஒரே சிந்தனையோடு நமக்கு பிடிப்பது போல் தான் எல்லோரும் பேசனும் என்று எதிர்பார்த்தால்.. நடக்குமா? அங்கு நடக்கும் விவாதங்களுக்கு அந்த விவாதங்களினை செய்பவரே பொறுப்பேற்க வேண்டும். நான் முன்பே சொன்னது போல்.. நான் கால்வேக்காடு பதிவன். நுனி புல் மேய்பவன். படிக்கும் காலத்தில் மனனம் செய்து, அதை பிரதிபலித்து கரையேறியவன். எனது குறுகிய புரிதல்களின் நினைவில் இருந்து, ஒதுக்குதலும் ஒதுங்குதலும் பார்ப்பீனியம் என்று பெரியார் சொல்லியுள்ளாராம். இப்படி தானே தொடங்கிய ஒன்றிற்கு தான் பொறுப்பேற்காமல் ஒதுங்கும் நாடோடி அண்ணன், எந்த அடிப்படையில் ஒட்டு மொத்த குழுமத்தை இகழ்கிறார்? அது அவர் விருப்பம். ஆனால் வினவு அண்ணன்கள் எதன் அடிப்படையில் பின்னூட்டம் இட்டார்கள்?

என்ன ஏது அன்று அறியாமல் குழுமத்தின் மீது கண்டனங்களை பதித்த அனைவரையும் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. எது சொன்னாலும் விசாரிக்கமல் நம்புகின்ற அப்பாவிகளாக உள்ளார்களே என்று!! சர்ச்சையின் பின்னணி என்னவென்று தெரியாமல் கருத்துக்கள் பதிவிட விருப்பமில்லை என்று சொன்ன சுரேஷ் கண்ணன் அண்ணன் மட்டும் என் கண் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.


~நான் குழுமத்தில் MrRDin.

உங்களுக்கு என்னிடம் மரியாதை உள்ளதோ, என்னமோ? தாங்கள் கூறிய சில சொற்றொடர்களை சாந்தி அக்காவின் பஸ்சில் உபயோகப்படுத்தியுள்ளேன். உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் தெரிவிக்க வேண்டியது என் கடமை. இல்லையெனில் எனது பதிவில் நான் சொன்னதை ஒரு அதிமேதாவி வேறு இடத்தில் வாந்தி எடுத்துள்ளான் என சொல்லி விடப் போகிறீர்கள்.
~

முதல் பின்னூட்டம் முற்றிற்று. (கடைசி இரண்டு பின்னூட்டங்கள் போடும் பொழுது தான்.. அண்ணன் நாடோடி வெளியிடுவாரா என சந்தேகம் கொண்டு COPY PASTE செய்து வைத்துக் கொண்டேன். முதல் பின்னூட்டம்.. இந்த அர்த்ததில் தான் போட்டேன். சில வார்த்தைகள் மாறுபடலாம்.)

//6) உண்மையில் விவாத‌ம் செய்ய‌ விருப்ப‌ம் இருந்தால் தார‌ள‌மாக‌ நாக‌ரீக‌மாக‌ வைக்க‌லாமே!!//

சரி நாமும் ஏன் அண்ணன் போல்.. பதிவு எழுத வேண்டும் என்று நாடோடி அண்ணனுக்கு நாகரீகமாக பின்னூட்டம் அனுப்பிட்டேன். ஆனால் அவர் வெளியிடவில்லை. குழுமத்தில் அண்ணன் பலமுறை அவரிடம் பேச தனி மடல் அனுப்புவதை வலியுறுத்தி சொல்லியுள்ளார். நானும் 'ஏன் அண்ணா?' பின்னூட்டங்களை பிரசுரிக்கவில்லை என கேட்டு இரண்டு மடல் அனுப்பினேன். பதிலில்லை.

நான் பெண்ணிய போராளியோ அல்லது ஆண்ணிய போராளியோ அல்ல. குழுமத்தில் ஒருவன் என்ற முறையில்.. குழுமத்தில் உள்ள அனைவர் மீதும் அண்ணன் நாடோடி பொதுப்படையாக சொன்ன குற்றச்சாட்டுகளை மறுத்து உண்மை வேறு என்று சொல்லவே இந்த சுயநல பதிவு. நானும் குழுமத்தில் இருப்பதால் என் சுயநலத்திற்காக போராடுகிறேன் என வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

- சாம்ராஜ்யப்ரியன்.


டிஸ்கி 1: இன்றளவில் நான் அற்ப படைப்புகள் படைக்க கூட திணறுபவனாக இருக்கலாம்... ஆனால் விமர்சனங்களுக்கோ, கேள்விகளுக்கோ, விவாதங்களுக்கோ, வசைகளுக்கோ பயந்து சுயநலமாக ஆதரவு பின்னூட்டங்களை மட்டும் வெளியிட்டுக் கொள்ளும் போலி அல்ல. மட்டறுத்தல் இல்லை இங்கே :-)).

டிஸ்கி 2: ஆதரவாக பின்னூட்டம் இடும் முன்.. இந்த இடுகையின் நம்பகத் தன்மை கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள். அல்லது நான் இன்று அண்ணன்கள் வினவு அவர்களை கேள்வி கேட்பது போல்.. நாளை எவரேனும் உங்களை கேட்கக் கூடும்.

டிஸ்கி 3: குறிப்பிட்ட கொள்கைகள் கொண்டு செயல்பட குழுமம் ஒரு இயக்கம் அல்ல. வலைப்பதிவு வைத்துள்ளவர்கள் மட்டும் விரும்பி தங்களை இணைத்துக் கொண்டுள்ள இடம். ஒரே விஷயத்தில் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் UNIQUE கருத்து இருக்கலாம். நமது வாதங்களை பிறர் ஏற்று தான் ஆக வேண்டும் என்றில்லை. புரிய வைக்க முனையலாம். சிலர் புரிந்துக் கொள்ள மறுத்தால்.. அது அவரோடு போகும். அதை விடுத்து.. வேலை வெட்டி இல்லாதவர்களும், மன விகாரம் படைத்தவர்களும் உள்ள குழுமம் அது என சிலர் சொல்வது வருத்தமளிக்கிறது.


Out of record:

  • வினவு அண்ணா.. தாங்கள் பஸ்சில் தொடரும் ஒருவரே குழுமத்தில் 'ஒரு weaker gender' யாரிடம் பேசினாலும் illustrated புனைவுகளாக தொடர்ந்து படைத்து வருகின்றாரே, அவருக்கு எல்லாம் கண்டனங்கள் கிடையாதா? நீங்க கண்டனம் தெரிவித்து இருந்தால் மன்னிக்கவும். நுனி புல் மேய்பவன் தானே.. சரியாக கவனித்து இருக்க மாட்டேன்.
  • அல்லது பஸ் எல்லாம் தமிழ் இணையவெளி கணக்கில் வராதா? தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்துக் கொள்வேன்.