செவ்வாய், 8 மார்ச், 2011

இணைய ஈழத் தமிழச்சிகளை இழிவுபடுத்துகிறாரா JMMS?

இதை முதலில் படித்து விட்டு வரவும்: http://3.ly/deMu

JMMS சாந்தி அக்கா: //எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//

அந்தப் பதிவின் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது. "நான் பொதுவா யாரையும் குறிப்பிடாமல் கலையரசனின் இந்த கட்டுரையில்" (http://www.jaffnatoday.com/?p=6348).

ஆனால் அந்தக் கட்டுரையை கலையரசன் அவர்கள் எழுதவில்லை. அது அல்ல இப்ப பிரச்சனை. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் பலரை அவதானித்து, ஆய்ந்தறிந்து சாந்தி அக்கா அவர்கள் ஒரு கருத்தினைச் சொல்லியுள்ளார்கள். அக்காவிற்கு வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் எத்தனைப் பேரைத் தெரியும் என்று தெரியவில்லை. அவர்களிடம் எல்லாம் ஆய்வு செய்து, பொதுவாய் ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார்கள் போல!!

அந்த ஆய்வறிக்கையை 'பயணமும் எண்ணங்களும்' சாந்தி அக்கா முழுவதும் வெளியிட்டால் தான்.. அக்கா ஈழத்தமிழச்சிகளை வேண்டுமென்றே இழிபடுத்தியுள்ளாரா அல்லது அவர் கண்டுபிடித்து சொன்னது உண்மையா, பொய்யா என தெரியும்.

சொல்வார்களா??

Out of record:

ஈழ படுகொலைகளைப் பற்றி ஒரு குழுமத்தில் விவாதிக்கும் பொழுது...

சாந்தி அக்கா மட்டும் சோனியா காந்தி சார்பாகவும், மற்ற அனைவரும் அவர்களுக்கு எதிராகவும் விவாதித்துள்ளனர்.

"நீங்க எப்படி.. சோனியா காந்தியின் செய்கையை நியாயப்படுத்துகிறீர்கள்?" என்ற பலரது கேள்விக்கு..

சாந்தி அக்கா சொன்ன பதில்.. "சோனியா காந்தி அழகா புடவைக் கட்டுவாங்க".

நீதி: நேர்த்தியாக புடவை அணிந்தவர்கள் கொலைகளுக்கு ஆதரவு தெரிவித்தால், அது நல்லதிற்கே இருக்கும்.

அன்று நடந்த தீவிர விவாதத்தை இன்று அவர்கள், 'பகடிக்காக சொன்னது' என்று சொல்லி தப்பிக்கலாம். ஆனால் சாந்தி அக்காவிற்கு எப்பவுமோ, ஈழத் தமிழர்கள் என்றால் எளப்பம் தானோ என்னவோ!! அதுவும் இந்த விவாதம் நடந்த அன்றைய சூழ்நிலையில், இவருடன் விவாதித்தவர்கள் எப்படி கொதிப்படைந்து போயிருப்பார்கள். நல்லவேளை நான் அந்தக் குழுமத்தில் அப்பொழுது இல்லாமல் போனேன்.

சனி, 16 அக்டோபர், 2010

அண்ணன்கள் 'வினவு.. வினை செய்'யிடம் ஒரு கேள்வி

நேற்றைய பதிவிலிருந்து என்ன விசயமென்று புரியவில்லை. இன்று எல்லாம் புரிகிறது.இதை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நீங்கள் வருந்த வேண்டாம்.

சாந்தி எழுதிய கட்டுரை வினவில் வந்து அதற்கு நீங்கள் பின்னூட்டம் போட்டதுதான் இவர்களுக்கு ஆத்திரத்தை வரவழைத்திருக்கிறது. ஆனால் வினவில் வாலாட்ட முடியாத இந்த ஜென்மங்கள் அப்பாவியான உங்களை அவர்களது சித்திரவதைக்கூடத்தில் வைத்து கடித்திருக்கிறார்கள்.

நல்லது யார் கடித்த்து என்பதை அடையாளம் காட்டிவிட்டீர்கள்.உரிய நேரத்தில், இடத்தில் இந்த பிரச்சினைக்கு முடிவு காணும் உங்களுக்கு வினவு என்றும் தோள் கொடுக்கும்.

இந்த நீல எழுத்தில் உள்ளவைகள் நாடோடி என்பவரின் பதிவில் தாங்கள் (வினவு) இட்ட பின்னூட்டம்.

என்னால் அந்த இடத்தில் தங்களுடன் பின்னூட்டங்களால் விவாதிக்க முடியவில்லை. ஏன் அண்ணன் நாடோடி அவர்களுடனே விவாதிக்க முடியவில்லை. மட்டறுத்தல் போட்டு.. அப்படியே தடுத்து விடுகிறார்.

அவர் வலைப்பதிவு. அவர் விருப்பம்.


உங்களுக்கான கேள்விகள்: அந்த பதிவை படித்து விட்டு பின்னூட்டம் போட்டீரா அல்லது படிக்காம போட்டீரா? ஏனெனில் என் கண்களுக்கு பட்ட சில முரண்கள் உங்களுக்கு படாதது ஏன்? நான் வலைப்பதிவில் நிரம்பி வழியும் பல அரைவேக்காடுகளில் ஒருவன் அல்ல. சில கால்வேக்காடுகளில் ஒருவன். எனக்கே ஒரு தடவை படித்ததற்கே தெரியுதே.. அவ்வ் உங்களுக்கு படவில்லையா?

ஆனால் விஷயம் முழுவதும் உணர்ந்ததாக சொல்கிறீர்கள். எப்படி? என்ன நடந்தது என்று முழுவதுமாக தெரியுமா!! ஒருவேளை எப்பொழுதும் போல் உங்க பார்வைகளுக்கு ஆதாரம் தருவிக்கப்பட்டிருந்தால்.. அது முழுமையானதா என விசாரித்து விட்டு தான் பின்னூட்டம் போட்டீரா?

அவ்வளவு தான் கேள்விகள்.

அடுத்து வெளியிடப்படாத என் பின்னூட்டங்கள்:

~//உல‌கில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக‌ளுக்கு எல்லாம் என்னிட‌ம் க‌ருத்து கேட்பார்க‌ள் போல் இருக்கிற‌து...//

உலகில் நடக்கும் அனைத்திற்கும் உங்களை கேள்விகள் கேட்பது மாபெரும் தவறு. அதற்கு என் கண்டனங்கள்.

//இந்த சாக்கடை அனுபவத்திலிருந்து இந்த சாக்கடையை எழுத்துக்களால் உற்பத்தி செய்யும் மனித விலங்குகளை நாம் என்றைக்கு வெளியேற்றுகிறோமோ அன்றுதான் இணையம் உற்சாகமானதாக இருக்குமென்று தோன்றுகிறது. அந்த சுத்தப்படுத்தும் வேலையை நண்பர்களின் உதவியுடன் தொடர்ந்து செய்வேன்.//

ஆனால் நீங்க யாரோ ஒரு நபர் அல்ல. இணைய தமிழ்ச் சூழல் தூய்மையாய், உற்சாகமாய் இருக்க வேண்டும் என அதன் மேல் மட்டற்ற காதல் கொண்டவர். அப்புறம் உங்ககிட்ட கேட்காம.. என்கிட்டயா கேட்பாங்க? எனது கண்டங்களை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.

பின்னூட்டங்கள் வெளியிட்டதற்கு நன்றி!! ~


மூன்றாம் பின்னூட்டம் முற்றிற்று.

'தொடர்ந்து' என்ற வார்த்தையின் மூலம் நாடோடி தனக்கு சுத்தப்படுத்தும் வேலை புதிதல்ல என தெளிவாக சொல்லியுள்ளார். மனித விலங்குகளை அகற்ற வேண்டுமென நல்லெண்ணத்தால் உந்தப்பட்டு.. நாடோடி அண்ணன் முகிலன் அண்ணனை கேள்விகள் கேட்டார். அது தொடர்பான சங்கிலி பிரச்சனையில் இருந்து முகிலன் அண்ணன் கேள்வி கேட்டால், 'உலகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு எல்லாம் என்னிடம் கருத்து கேட்கிறார்கள்' என அங்கலாய்த்து கொள்கிறார். நழுவுகின்ற மீனாக இருக்கும் அண்ணன் நாடோடி எப்படி நண்பர்களின் உதவியுடன் சுத்தம் செய்வார்? சுத்தம் செய்ய சாக்கடையில் இறங்க வேண்டியிருக்கும் அல்லவா ஆனால் நாடோடி அண்ணன் கரையேறி விட்டார்.


//ப‌திவ‌ர் சாந்தி அவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னை முகில‌ன் ம‌ட்டும் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌து அல்ல‌, அது இரும்புத்திரை அர‌விந்த், ம‌ற்றும் ப‌திவ‌ர் ம‌தார் அவ‌ர்க‌ளும் ச‌ம்ப‌ந்த‌ ப‌ட்ட‌து என்ப‌தும் என‌க்கு தெரியும், ஆனால் அர‌விந்த் ம‌ற்றும் ம‌தார் என‌க்கு அறிமுக‌ம் இல்லாத‌வ‌ர்க‌ள்,... என‌வே அவ‌ர்க‌ளை ப‌ற்றிய‌ புரித‌ல் என‌க்கு இல்லாத‌தால் எந்த‌வொரு இட‌த்திலும் இவ‌ர்க‌ளை ப‌ற்றி நான் பேசிய‌து கிடையாது..//

வினவின் வாசகன் என்ற முறையில் இந்த பத்தியில் இருந்து சில சந்தேகங்கள். நாடோடி அண்ணன் மாதர் என்ற பெண்ணின் அறிமுகம் இல்லை என சொல்லியுள்ளார். ஆனால் குழுமத்தில் அந்த பெண்ணிடம் ஒருமையில், "எனக்கு உன் மேல் மரியாதை இல்லை. விவாதம் புரிய விருப்பமில்லை" என்கிறார். "பிறகு எதன் அடிப்படையில் நான் சொன்னது புரளி என்று சொன்னீர்கள்?" என மீண்டும் மதார் கேட்கிறார். 'என்னை வீணாக சீண்டினால்.. பின் விளைவுகள் மோசமாக இருக்கும்' என்று சொல்கிறார். முன் பின் அறிமுகம் இல்லை என சொல்லும் அவர்.. ஒருமையில் ஒரு பெண்ணிடம் இப்படி பொதுவெளியில் பேசுவது எந்த ஆதிக்கத்தின் கீழ் வருகிறது!! நாடோடி அண்ணனுக்கு எப்படி பொதுவில் பெண்களிடம் பேச வேண்டும் என சொல்லிக் கொடுங்கள். உருக்கமாக பதிவு எழுதி விட்டால் மட்டும் போதாது.

முகிலன்.. அரவிந்த்.. மதார்.. அருள் ஸ்டீபன் (நாடோடி) என பிரச்சனையுடன் சம்பந்தப்பட்ட நால்வர் மட்டும் அக்டோபர் 11 அன்று பேசிக் கொள்கிறார்கள். கவனிக்கவும் பேசிக் கொள்கிறார்கள். அந்த சமயத்தில், "உன்னால‌ ஆன‌த‌ பாருடா... வெத்துவேட்டு.. சும்மா குரைக்காதே.... " என இனிதே சண்டையினை ஆரம்பிக்கிறார் நாடோடி அண்ணன். சரியாக நண்பகல் மணி 12:08. சும்மா இருந்தவரை யாரும் எதுவும் சொல்லி விடவில்லை. நாடோடி அண்ணன் பதிவில் சொன்னது போல் குழுமத்தில் உள்ளவர்கள் யாரும் வன்மம் கொண்டு தகாத வார்த்தைகளை அவர் மீது உபயோக்கிக்கவில்லை. அவர் தொடங்கினார். பதிலுக்கு அரவிந்த் அண்ணன். உடனே அரவிந்த்க்கு கண்டனங்கள் வந்தன. ஆனால் விவாதத்தின் போக்கை மாற்றிய மதிப்பிற்குரிய நாடோடி அண்ணன் மீது ஒரு சின்ன கண்டனம் கூட இதுவரை யாருமே சொல்லவில்லை. நாடோடி அண்ணன் பெற்றது அனுதாபங்களை மட்டுமே!!


~அண்ணா.. தனி மனித பிரச்சனையில் ஒரு குழுமத்தையே குற்றம் சாட்டியதற்கு என் கண்டனங்கள். அங்குள்ள 200 பேரும் சாக்கடையில் உள்ளவர்கள் என்று பொதுப்படையாக சொல்கிறீர்கள். தங்களை போல் மன உளைச்சல் அதிலுள்ள ஒருவருக்கு கூட வராதா? 200 பேரில் எத்தனை நபர்கள் குழுமத்திற்கு வரும் அத்தனை மின்னஞ்சல்களையும் படிக்கிறார்கள். படிக்காமலே குப்பைத் தொட்டிக்கு தள்ளுபவர்கள் தான் அதிகம். அந்த 200 பேரில் எவரேனும் 2 நாள் ஊரிற்கு கூட சென்றிருக்கலாம். 200 பேரில் இணையம் வாரமொரு முறை, மாதமொரு முறை உபயோகப்படுத்துபவர்கள் உள்ளார்கள். அனைவரையும் சேர்த்து சாக்கடை ஆக்கி விட்டீர்கள்.

ஒரிருவர் தான் கண்டனம் சொல்லியுள்ளதாக சொல்லியுள்ளீர்கள். அடுத்த நொடியே தினேஷ் குமார்(முகிலன்).. ஜானகிராமன், மணீஜி.. இரவு கேபிள்ஜி என தங்கள் சார்பாக பேசி கண்டனம் அளித்தது எல்லாம் தங்கள் பார்வைக்கு வரவில்லையா?~

எனது இரண்டாம் பின்னூட்டம் முற்றிற்று.

விவாதம் பண்ண முடியாமலோ, விருப்பம் இல்லாமலோ.. முதலில் உணர்ச்சி வசப்பட்டது நாடோடி அண்ணன். ஆனால் குழுமத்தில் உள்ளவர்கள் அனைவரும் வாந்தி எடுக்கிற மேதாவிகள் என்ற ரீதியில் அவர் பதிவு எழுதியுள்ளார். நான் இங்கு ஆதாரங்கள் என்று எதையும் வைக்கவில்லை. இந்த பதிவின் ஆணி வேர் ஆதாரங்கள் அனைத்தும் குழும விவாத பக்கங்களில் அப்படியே உள்ளன. விருப்பமுள்ளவர்கள் உறுப்பினராகி பார்த்துக் கொள்ளலாம். எனக்கு சாதகமானவற்றை COPY PASTE செய்யும் சின்ன புத்தி இல்லை என்பதையும் பதிந்துக் கொள்கிறேன்.

குழுமம் என்பது இயக்கம் அல்ல. ஒரே சிந்தனையோடு நமக்கு பிடிப்பது போல் தான் எல்லோரும் பேசனும் என்று எதிர்பார்த்தால்.. நடக்குமா? அங்கு நடக்கும் விவாதங்களுக்கு அந்த விவாதங்களினை செய்பவரே பொறுப்பேற்க வேண்டும். நான் முன்பே சொன்னது போல்.. நான் கால்வேக்காடு பதிவன். நுனி புல் மேய்பவன். படிக்கும் காலத்தில் மனனம் செய்து, அதை பிரதிபலித்து கரையேறியவன். எனது குறுகிய புரிதல்களின் நினைவில் இருந்து, ஒதுக்குதலும் ஒதுங்குதலும் பார்ப்பீனியம் என்று பெரியார் சொல்லியுள்ளாராம். இப்படி தானே தொடங்கிய ஒன்றிற்கு தான் பொறுப்பேற்காமல் ஒதுங்கும் நாடோடி அண்ணன், எந்த அடிப்படையில் ஒட்டு மொத்த குழுமத்தை இகழ்கிறார்? அது அவர் விருப்பம். ஆனால் வினவு அண்ணன்கள் எதன் அடிப்படையில் பின்னூட்டம் இட்டார்கள்?

என்ன ஏது அன்று அறியாமல் குழுமத்தின் மீது கண்டனங்களை பதித்த அனைவரையும் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. எது சொன்னாலும் விசாரிக்கமல் நம்புகின்ற அப்பாவிகளாக உள்ளார்களே என்று!! சர்ச்சையின் பின்னணி என்னவென்று தெரியாமல் கருத்துக்கள் பதிவிட விருப்பமில்லை என்று சொன்ன சுரேஷ் கண்ணன் அண்ணன் மட்டும் என் கண் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.


~நான் குழுமத்தில் MrRDin.

உங்களுக்கு என்னிடம் மரியாதை உள்ளதோ, என்னமோ? தாங்கள் கூறிய சில சொற்றொடர்களை சாந்தி அக்காவின் பஸ்சில் உபயோகப்படுத்தியுள்ளேன். உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் தெரிவிக்க வேண்டியது என் கடமை. இல்லையெனில் எனது பதிவில் நான் சொன்னதை ஒரு அதிமேதாவி வேறு இடத்தில் வாந்தி எடுத்துள்ளான் என சொல்லி விடப் போகிறீர்கள்.
~

முதல் பின்னூட்டம் முற்றிற்று. (கடைசி இரண்டு பின்னூட்டங்கள் போடும் பொழுது தான்.. அண்ணன் நாடோடி வெளியிடுவாரா என சந்தேகம் கொண்டு COPY PASTE செய்து வைத்துக் கொண்டேன். முதல் பின்னூட்டம்.. இந்த அர்த்ததில் தான் போட்டேன். சில வார்த்தைகள் மாறுபடலாம்.)

//6) உண்மையில் விவாத‌ம் செய்ய‌ விருப்ப‌ம் இருந்தால் தார‌ள‌மாக‌ நாக‌ரீக‌மாக‌ வைக்க‌லாமே!!//

சரி நாமும் ஏன் அண்ணன் போல்.. பதிவு எழுத வேண்டும் என்று நாடோடி அண்ணனுக்கு நாகரீகமாக பின்னூட்டம் அனுப்பிட்டேன். ஆனால் அவர் வெளியிடவில்லை. குழுமத்தில் அண்ணன் பலமுறை அவரிடம் பேச தனி மடல் அனுப்புவதை வலியுறுத்தி சொல்லியுள்ளார். நானும் 'ஏன் அண்ணா?' பின்னூட்டங்களை பிரசுரிக்கவில்லை என கேட்டு இரண்டு மடல் அனுப்பினேன். பதிலில்லை.

நான் பெண்ணிய போராளியோ அல்லது ஆண்ணிய போராளியோ அல்ல. குழுமத்தில் ஒருவன் என்ற முறையில்.. குழுமத்தில் உள்ள அனைவர் மீதும் அண்ணன் நாடோடி பொதுப்படையாக சொன்ன குற்றச்சாட்டுகளை மறுத்து உண்மை வேறு என்று சொல்லவே இந்த சுயநல பதிவு. நானும் குழுமத்தில் இருப்பதால் என் சுயநலத்திற்காக போராடுகிறேன் என வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

- சாம்ராஜ்யப்ரியன்.


டிஸ்கி 1: இன்றளவில் நான் அற்ப படைப்புகள் படைக்க கூட திணறுபவனாக இருக்கலாம்... ஆனால் விமர்சனங்களுக்கோ, கேள்விகளுக்கோ, விவாதங்களுக்கோ, வசைகளுக்கோ பயந்து சுயநலமாக ஆதரவு பின்னூட்டங்களை மட்டும் வெளியிட்டுக் கொள்ளும் போலி அல்ல. மட்டறுத்தல் இல்லை இங்கே :-)).

டிஸ்கி 2: ஆதரவாக பின்னூட்டம் இடும் முன்.. இந்த இடுகையின் நம்பகத் தன்மை கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள். அல்லது நான் இன்று அண்ணன்கள் வினவு அவர்களை கேள்வி கேட்பது போல்.. நாளை எவரேனும் உங்களை கேட்கக் கூடும்.

டிஸ்கி 3: குறிப்பிட்ட கொள்கைகள் கொண்டு செயல்பட குழுமம் ஒரு இயக்கம் அல்ல. வலைப்பதிவு வைத்துள்ளவர்கள் மட்டும் விரும்பி தங்களை இணைத்துக் கொண்டுள்ள இடம். ஒரே விஷயத்தில் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் UNIQUE கருத்து இருக்கலாம். நமது வாதங்களை பிறர் ஏற்று தான் ஆக வேண்டும் என்றில்லை. புரிய வைக்க முனையலாம். சிலர் புரிந்துக் கொள்ள மறுத்தால்.. அது அவரோடு போகும். அதை விடுத்து.. வேலை வெட்டி இல்லாதவர்களும், மன விகாரம் படைத்தவர்களும் உள்ள குழுமம் அது என சிலர் சொல்வது வருத்தமளிக்கிறது.


Out of record:

  • வினவு அண்ணா.. தாங்கள் பஸ்சில் தொடரும் ஒருவரே குழுமத்தில் 'ஒரு weaker gender' யாரிடம் பேசினாலும் illustrated புனைவுகளாக தொடர்ந்து படைத்து வருகின்றாரே, அவருக்கு எல்லாம் கண்டனங்கள் கிடையாதா? நீங்க கண்டனம் தெரிவித்து இருந்தால் மன்னிக்கவும். நுனி புல் மேய்பவன் தானே.. சரியாக கவனித்து இருக்க மாட்டேன்.
  • அல்லது பஸ் எல்லாம் தமிழ் இணையவெளி கணக்கில் வராதா? தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்துக் கொள்வேன்.


செவ்வாய், 30 மார்ச், 2010

நானும் பதிவர் தான்

எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு இரண்டு பதிவர் சந்திப்பு நடந்து விட்டது. சென்னையில் இருந்தும் கலந்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. எப்படியும் இந்த முறை பதிவர் சந்திப்பு பார்த்தே தீர வேண்டுமென கட்டிக் கொண்ட கங்கணத்திற்கு இணங்க விழுப்புரத்தில் இருந்து நல்ல வெயிலில் கிளம்பி முதன்முறையாக பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு நேரத்தில் சென்றேன். எப்பவும்அனைத்து இடத்திற்கும் தாமதமாக செல்லும் நான் சீக்கிரம் சென்று விட்டேன் போல.

எவராவது வந்திருப்பார்களா எனத் தயங்கி தயங்கி உள்ளே சென்றவுடன், உண்மைத் தமிழன் 'வாங்க' என்று சொன்னார். 'அட.. நான் பதிவர் என்று இவருக்குதெரிந்திருக்கிறதே!' என்று மகிழ்ச்சியோடு உள்ளேறினேன். ஆனால்வருபவர்களை எல்லாம் அவர் அப்படி தான் வரவேற்றார் போல. நான் சென்றுதான் நாற்காலிகள் எல்லாம் கீழே இருந்து தூக்கி வந்து வரிசையாக அடுக்கினேன் (சம்பந்தப்பட்டவர்கள் என் சேவையை கவனிக்கவும்). தெரிந்த முகமான கேபிள் சங்கரைப் பார்த்து புன்னைக்க கூட நேரம் அளிக்கவில்லை அவர். வெந்நீர் நிரப்பப்பட்ட சக்கரத்தை காலில் கட்டியிருந்தது போல் ஒரே பரபரப்பு.

வெயிலில் நீண்ட நேரம் வந்ததால் ஏற்பட்ட களைப்பாலும்; மதிய உணவு உண்ணாததாலும்; புழுக்கத்தாலும் சோர்வும், எரிச்சலும் அழையா விருந்தாளியாக வந்து வாட்டியது. பெரிய இறக்கைகள் கொண்ட மின் விசிறி பக்கத்தில் வந்து நான் அமர்ந்ததும், என்னைப் பார்த்து விட்டு 'நீ கேளேன்' சங்கர் அருகில் வந்தார்.

"நீங்க அதி பிரதாபன் தான?"
"இல்ல.. சாம்ராஜ்ய ப்ரியன்."
"ஓ!! நான் சங்கர்" என்று கை கொடுத்து சிரித்தார்.

நான் பதிலுக்கு சிரித்து வைத்தேனே என்று கூட தெரியவில்லை. அவர் என்ன நினைத்தாரோ வேகமாக எழுந்து சென்று விட்டார். எனக்கு ஒரே கோபமாய் வந்து விட்டது. அதிபிரதாபன் மேல். எனக்கு வலைப் பதிவர்களில் அவரை மட்டும் தான் ஓரளவு தெரியும். எனக்கு முன் வந்து எனக்கு துணையாய் இருக்க வேண்டிய அவசியத்தினை மறந்து பொறுப்பில்லாமல் இருக்கிறார். கேட்டால், 'போப்பா.. தலைக்கு மேல வேல' என்கிறார். அது உண்மையா, பொய்யா என தெரியவில்லை. அஜீத்தை நேரில் பார்க்கும் பொழுது தான் தெளிவுப்படுத்தனும்.

சிறிது நேரத்தில் வந்த ஜாக்கி சேகரிடம் சம்பிரதாய விசாரிப்புகளை முடிக்கும் போது, "இராஜ ப்ரியன் எப்படி இருக்கார்?" என கேட்டார். நான் வேறு, இராஜ ப்ரியன் வேறு என்று வெகு சிலருக்கு தான் தெரிகிறது.
உழவன் வந்ததும் தான் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. மேலும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அண்ணன் சிவராமனும் வந்து விட்டார். இன்னும் கொஞ்சம் 'ரிலாக்ஸ் ஆகி அவர் அருகில் சென்று அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, 'சார் யார்?' என்று என்னைப் பார்த்து ஜ்யோவ்ராம்சுந்தர் கேட்டார். நான் எவ்வளவு யோசித்தும் என்னை வேறு எவரேனும் 'சார்' என்று குறிப்பிட்டுள்ளார்களா என யோசித்துப் பார்த்தேன். ம்ஹூம்.. இல்லை. 'அட, கொஞ்சம் தூரத்திலே இருந்துக் கொண்டால் மரியாதை கிடைக்கும் போல' என்று புரிந்தது. நான் இப்படி யோசிக்கிறேன் என்று தெரிந்தால் அதி பிரதாபனும், அதிஷாவும் மகிழ்வார்கள் என நினைக்கிறேன். அவர்களிடம் ஏதாவது கேட்டுக் கொண்டே இருக்கனும் போலவே தோன்றுகிறது.

அதுவரை மின் விசிறி பக்கத்தில் அமர்ந்திருந்த என்னை காற்று கம்மியாய் வந்த எதிர்புறத்திற்கு அழைத்து சென்று விட்டார் உழவன். எதிர்புறத்தில் அவர் அருகில் அமர வாய்ப்பு கிடைக்காமல் ஒரு மூலையில் மீண்டும் ஒடுக்கப் பட்டேன். புயலென வந்த 'ஞாநி' என் முன்னால் இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தார். திடீரென்று அனைவரும் எழுந்து அவரவர் பெயரையும், அவர்கள் எழுதும் வலைப் பக்கத்தின் பெயரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். 'இதென்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு?' எனத் தோன்றியதால் வராத அழைப்பை வந்ததாக காட்டிக் கொண்டு வெளியில் சென்று வசதியாக ஒரிடத்தில் நின்று நோட்டமிட்டேன். பெயர் சொல்லும் வைபவம் எதிர்புறம் சென்றதும் மீண்டும் வந்து அமர்ந்தேன். இதற்காகவாவது ஒரு 'ஃபோரம்' ஆரம்பித்தால் நல்லாயிருக்கும் என நினைத்துக் கொண்டேன். முன்பே வலைப் பதிவர்கள் பெயரெல்லாம் மனனம் செய்து, ஒன்றுக்கு இரண்டு முறை வீட்டிலே அனைவர் பெயரையும் எழுதி பார்த்து விட்டால்.. 'நீங்க வலைப்பதிவரா?' என்ற கேள்வியை கேட்கும் சங்கடம் தவிர்க்கலாம் அல்லவா?அப்புறம் எல்லாம் நல்லா தான் போய் கொண்டிருந்தது. ஞாநி திடீரென அவர் பாக்கெட்டில் இருந்து எடுத்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து ஒன்று ஒன்றாக எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுவரை ஒளிந்திருந்த பசி தலைத் தூக்க தொடங்கி விட்டது. நல்ல வேளையாக டீயும், இரண்டு பிஸ்கட்டும் வந்தது. கூட்டம் நிறைய இருப்பதால் மீண்டும் இரண்டாவது முறை என் முன்னால் டீ வந்தது என நினைக்கிறேன். இந்த முறை எடுக்கலாமா, வேண்டாமா என யோசித்தேன். எனக்கு முன்பே டீ அளித்ததை மறந்து விட்டார்களா அல்லது இது ஏதாவது சதியா என சந்தேகம் வந்து விட்டது. எவெரெல்லாம் இரண்டு முறை டீ குடிக்கிறாங்க என்று யாரோ உளவு பார்ப்பது போல் இருந்தது. சரி யார் பார்த்தால் என்ன என்று டீ எடுக்கப் போகும் பொழுது மீண்டுமொரு சந்தேகம். டீ கொடுக்கும் பையன் நான் ஓசியாக இரண்டு முறை அருந்தியதை வெளியில் சொன்னால், ஒட்டு மொத்த குழுமத்திற்கு அவப்பெயர் பொதுப் படையாக வந்து விடுமென 'டீ கேன்சல்' செய்து விட்டேன். அந்த பக்கம் வந்த தண்டோராவை பார்த்து புன்னகைத்ததும், 'நல்லாஅயிருக்கியாப்பா?' என முதுகில் தட்டி கேட்டு விட்டு சென்றார்.

நான் எதிர்பார்த்த மற்றொரு ஆள் அதிஷா. நாலே நாலு வார்த்தை பேசலாம் என நினைத்திருந்தேன். பாதியில் வந்தார். முன்னால் சென்றார். அங்கேயே ஐக்கியமாகி விட்டார். சங்கடத்தில் இருந்து தப்பியது அவரா, நானா என தெரியவில்லை.

'ஆங்கில வலைப் பதிவர்கள் எங்கயோ முன்னால் போய் கொண்டிருக்கின்றனர்' என்ற லக்கியின் குரல் கவனத்தை திசை திருப்பியது. அவர்கள் எங்க போயிருப்பார்கள் என்ற அறிய ஆர்வன் மேலிடும் பொழுது, 'அவர்கள் வலைப் பதிவு மூலமாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர்' என்றார். இது தான் அவர் குறிப்பிட்ட ஆங்கில வலைப்பதிவின் முன்னேற்றமா என்று மனம் கொஞ்சம் அதை இழுத்ததும், திசை திரும்பிய கவனம் வேகமாக 'யூ டர்ன்' எடுத்து விட்டது. (லக்கி மற்றும் பலர் இன்னும் என்னன்னமோ பேசினார்கள். அதையெல்லாம் சரியாக காதில் வாங்கவில்லை அல்லது விழவில்லை.)

ஒருவழியாக நர்சிம் பதிவர் சந்திப்பினை முடித்து வைக்க, கீழே வந்தேன். யுவ கிருஷ்ணா அருகில் சென்று பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்ப்பது போல் நின்றிருந்தேன்.
'நீங்க தினேஷ் தானே!'
எனக்கு ஆச்சர்யமாகி விட்டது. இதற்கு முன் பல தடவை நான் அவரை கிழக்கு அலுவலகத்தில் பார்த்திருக்கேன். ஒருமுறை நேரிலும், பலமுறை இணையத்திலும் பேசியிருக்கிறென். முதல் தடவை பேசும் பொழுது, வேற்று கிரகத்து ஜந்துவை பார்ப்பது போலவே பார்த்து.. "நீங்க வலைப்பதிவரா? நாம் இதற்கு முன் பேசியிருக்கோமா?" எனத் தெளிவாய் கேட்டு விட்டு, "சாரிங்க நிறைய பேர பார்க்கிறேனா.. யாரு என்னன்னு தெரியல!!" என்று எஸ் ஆகி விட்டார்.

அவர் அருகில் சென்று நின்றதன் நோக்கம், அவருடன் ஒட்டிக் கொண்டு வேளச்சேரி அருகேயோ அல்லது பக்கத்திலிருக்கும் பேருந்து நிறுத்தத்திலோ இறங்கிக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன். அவர் மிக ஆர்வமாக எவருடனோ பேசிக் கொண்டிருந்தார். நர்சிம் அவர்கள் மின் தூக்கி கொடுக்க ஒத்துக் கொண்டார். ஆக பதிவர் சந்திப்பு என்னளவில் நன்றாகவே முடிந்தது.

டிஸ்கி 1: முதலில் காற்றுக்காக நானும் முதல் வரிசையில் தான் மின் விசிறி அருகில் அமர்ந்திருந்தேன். (நல்லவேளை அஷோக் வரும் முன் இடம் மாறி விட்டேன். இல்லை எனக்கும் ஒரு சாயம் பூசியிருப்பார்.)

டிஸ்கி 2: அடிப்படை உறுப்பினராக இப்பொழுது சேர்ந்து.. கஷ்டப்பட்டு நிறைய புத்தகமெல்லாம் படித்து, எவருக்கும் புரியாத சில பதிவுகள் எழுதி, தேர்ந்தெடுத்த பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் போட்டு.. முப்பது வருடத்திற்கு பிறகு இந்த குழுமத்திற்கு தலைவன் ஆவேன் என நினைக்கிறேன்.

டிஸ்கி 3: நான் இவ்வளவு சொல்லியும் நான் வலைப் பதிவரா.. என சந்தேகம் கொள்பவர்கள், நான் இன்று காலையில் எழுதிய 'நல்ல கடவுள்!!' என்ற கதை படித்து தயவு செய்து நம்புங்கள்.புதன், 2 டிசம்பர், 2009

பிரதிபலிப்பு

ஆன்டன் செகாவ் - 'சிறுகதைச் சக்கரவர்த்தி' என்று இலக்கிய மேதைகளால் செல்லமாக அழைக்கப்படுபவர். லியோ டால்ஸ்டாய் பெரிதும் பாராட்டிய செகாவ் அவர்களின் "டார்லிங்" என்ற சிறுகதையின் தழுவல் தான் எனது பிரதிபலிப்பு. இந்த கதையின் அடிநாதமாக வரும் களங்கமற்ற காதல் மனித இனம் அனைத்திற்குமே பொதுவானது.
("டார்லிங்" கதையை ஏற்கனவே படித்தவர்கள்.. மேலே படிக்க வேண்டாம்.)

***********************************

ஜானு ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகள். வீட்டின் பின் பக்கம் இருக்கும் வேப்பமரத்தடி நிழலில் உட்கார்ந்து காற்றின் ஈர பதத்தை உள் வாங்கியபடி யோசனையில் மூழ்கியிருந்தாள். அவளது சிந்தனையை வேலியின் பின்புறம் இருந்து வந்த குரல் கலைத்தது.

"ச்சே!! இன்னைக்குமா? என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறதுக்குன்னே இந்த மழை வந்து தொலைக்குது" என்று புலம்பினான் திறந்த வெளி நாடக அரங்கத்தின் மேலாளரான விமல்.

"பாத்தீங்களா ஜானு. என் பொழப்ப! என்ன பண்ணி என்ன புண்ணியம்? நல்ல கதை, இயல்பான் நடிகருங்க, தரமான இசை என என பார்த்து நிகழ்ச்சி நடத்தினாலும் பாதி கொட்ட தான் நிரம்பும். மத்தவன் மாதிரி கொச்சையாவோ, கோமளித்தனமாவோ எதாவது பண்ணா அங்க போய் விழுவானுங்க. இப்படி வெயில் காலத்துல தினமும் மழை பெஞ்சா என்னால என்ன செய்ய முடியும்?"

நேற்றும் இப்படி தான் வானம் பார்த்து பேசிக் கொண்டிருந்தான் விமல். பாவம் நாளைக்கும் இப்படி தான் பேசுவான். ஜானுவை ஒரு ஆழ்ந்த சோகம் சூழ்ந்து
க் கொண்டது. கண்களில் இருந்து நீர் வந்து விடும் போலிருந்தது. அவன் மீது இரக்கம் உண்டாகி காதலாக மலரும் போலிருந்தது. ஜானுவிற்கு யார் மீதாவது அக்கறை செலுத்த வேண்டும். அன்பு செலுத்தாமல் அவளால் இருக்க முடியாது. தொடக்க காலத்தில் அவள் தன் அப்பாவை நேசித்தாள். இப்போது அவள் அப்பா ஒரு இருட்டறையில் முடங்கி மூச்சு விடவே சிரமப்பட்டு கொன்டிருக்கார். ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவிற்கு வரும் அத்தையிடம் அன்பு செலுத்தியிருக்கிறாள். பத்தாம் வகுப்பில் தமிழ் எடுத்த மரகதம் டீச்சரை நேசித்திருக்கிறாள்.

'பரவாயில்ல்.. அழகா தான் இருக்கு' என்று அவளைப் பார்க்கும் ஆண்கள் பெருமூச்சு விடுவனர். 'என் செல்லம்' என்று பெண்கள் அவளது கன்னத்தை கிள்ளி எடுத்து திருஷ்டி எடுப்பார்கள்.

ஜானுவிற்கு பிறகு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை. மாலை வேளைகளில் மழை வரக் கூடாது என வேண்டிக் கொண்டாள். மக்களின் மட்டமான இலக்கிய ரசனைகள் குறித்து அவளது தோழிகளிடம் புலம்பினாள். அவள் தந்தை ஒருவாறு யூகித்து பக்கத்து வீட்டு விமலிற்கும், ஜானுவிற்கும் கல்யாணம் பண்ணி வைத்தார். விமலின் அலுவலகத்தில் உட்கார்ந்து கணக்குப் பார்த்தாள். நடிகர்களிடம் சிரித்துப் பேசினாள். கல்யாணமான சில மாதங்களிலே அவள் உடல் பருமனும், முகம் புது பொலிவும் அடைந்திருந்தது. மகிழ்ச்சியான இல்லற நாட்களைத் தொடர்ந்து, விமலுக்கு மஞ்சள் காமாலை வந்து மரணமடைந்தான்.

"ஐயோ!! உங்க ஜானு இப்ப தனியாயிட்டேனே, நெஞ்சு உடைஞ்சு போயிடும் போலிருக்கு" என்று அழுதாள். கோயில், குளம், தனிமை, இருட்டு என முடங்கி கிடந்தாலும் வந்து போறவர்கள் பரிதாபத்தின் பெயரால் அவளது துக்கத்தை அதிகப்படுத்தினர்.

ஆறு மாததிற்கு ஒரு நாள் காற்றில், ஜானு வீட்டு பின்னால் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்திருந்தது. அதை விலை பேச சக்திவேல் என்னும் மர வியாபாரி அவள் வீட்டிற்கு வந்திருந்தான். 'அருமையான மரம்' என்றான். அவளது சோகத்தை அவன் பொருட்படுத்தவில்லை. எது நல்ல மரம் எவை கெட்ட மரம் என்று கண்டுபிடிக்கும் வழியை ஜானுவிடம் சொன்னான். அவனது உற்சாகம் அவளைத் தொற்றிக் கொண்டது. பத்து நிமிடங்கள் தான் எனினும் சக்திவேல் நிறைய நேரம் பேசி விட்டு போனதாக ஜானுவிற்கு தோன்றியது. ஆறுதலாக எப்பவும் பேச வரும் பாட்டி, பேச்சு வாக்கில் மர வியாபாரியின் நல்ல குணத்தை பற்றிச் சொன்னாள். ஜானுவிற்கு சக்திவேலுவை பிடித்து தானிருந்தது. அவர்கள் இருவரும் மனமொத்தி கல்யாண பந்தத்தில் இணைந்தனர்.

மரம் வாங்க சக்திவேல் வெளியூர் சென்ற தினங்களில் எல்லாம், ஜானு தான் கடையில் அனைத்து வேலைகளையும் பார்த்தாள். ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள பிரத்யேக வாசனையைப் பற்றி அவள் பேசுவாள். தூண், உத்தரம், கழி, பலகை, விட்டம் போன்றவற்றிக்கு எந்த மரம் நல்லது என்று தெரிந்து வைத்திருந்தாள்.

"ஒவ்வொரு வருஷமும் மரத்தின் விலை ஏறத் தான் செய்யுது. ஆனா நல்ல மரம் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதற்காக எத்தனை இடம் ஏறி இறங்கனும் தெரியுமா?" என்று அதிசயத்தில் உறைவதுபோல் கன்னங்களைக் கைகளால் மூடிக் கொள்வாள் ஜானு.
"ஏன் எப்ப எப்ப பார்த்தாலும் மரம், மரம்ன்னே பினாத்துற? ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம ஊரில் நல்ல நாடகம் ஒன்னு போட்டிருக்காங்க. போலாமா?" என்று ஜானுவின் தோழி அழைத்தாள்.
"நாடகமா?? அதெல்லாம் வேலை இல்லாதவங்களுக்காக தான்னு அவர் சொல்லியிருக்காரு. எங்க ரெண்டு பேருக்கு தான் இங்க பார்க்க வேண்டிய வேலை எவ்வளவு இருக்கு" என்றாள் ஜானு.
ஆறு வருடம் மிக இனிமையாக கழிந்த வாழ்க்கை, மரம் வெட்டும் கத்தி தவறி சக்திவேலுவின் மேல் விழுந்து ஒரு முடிவிற்கு வந்தது.

வாழ்க்கையே சூனியமான ஜானு தன் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு நிற உடைகளை மட்டுமே அணிய ஆரம்பித்தாள். எதன் பொருட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்தாள். ஜன்னல் கதவுகளை கூட திறக்க மனமில்லாமல் மிகவும் முடங்கி இருந்தாள். எட்டு மாதங்கள் ஆகியும் அவள் மனதில் இருந்து துக்கம் சிறிதும் குறையவில்லை. இந்த எட்டு மாதங்களும் அவளுடன் இருந்த பூனைக்கு இரண்டு நாட்களாக உடம்பிற்கு முடியவில்லை. அதை எடுத்துக் கொண்டு மிருக வைத்தியனிடம் போனாள் ஜானு.

அந்த மிருக வைத்தியனை அவளுக்கு முன்னமே தெரியும். மரம் வாங்குவதற்காக சில முறை வந்திருக்கிறான். இவன் மீது சந்தேகம் கொண்டு அவன் மனைவி அவளது தாய் வீட்டிற்கு எப்பொழுதோ சென்று விட்டிருந்தாள். ஜானுவிற்கு அவன் தனியாக மிக கஷ்டப்படுவதாக தோன்றியது. அடிக்கடி அவனை அதன் பிறகு பார்க்க வந்தாள்.

காய்கறி வாங்கப் போன இடத்தில், "நம்ம ஊர்ல சரியான மிருகப் பராமரிப்பே இல்ல. அதான் எல்லா தொத்து நோயுங்களுக்கும் காரணம்" என்று தெரிந்தவர்களிடம் சொன்னாள். ஆடுமாடுகளைத் தாக்கும் கணை நோய்களை பற்றி அவள் அடுக்கடுக்காக பேசுவாள். ஊராட்சிக்குச் சொந்தமான கசாப்புக் கடைகளின் ஓழுங்கீனங்களைப் பற்றியும் பேசுவாள்.

"உனக்குப் புரியாத விஷயங்களைப் பற்றி பேசாதன்னு எத்கன முறை சொல்லியிருக்கேன்?" என்று கோபப்பட்டான் வைத்தியன்.
"அப்ப.. நான் எதை பத்தி பேசுறது?" என அழுவாள் ஜானு. தன் மீது கோபப்படாதிருக்கும்படி கெஞ்சுவாள்.

ஆனால் அவளை சோகத்தில் மூழ்கடித்து விட்டு மிருக வைத்தியன் வேறு ஊரிற்கு மாற்றலாகி சென்றான். ஜானு இப்போது முற்றிலும் தன்னந்தனி ஆள். உண்பது, உறங்குவது என எது செய்தாலும் அவள் மனம் அதில் ஓட்டாமல் ஒரு இயந்திர தன்மை அவளுள் குடிக்கொண்டது. அவளுக்கென்று தனி அபிப்ராயம் எதுவும் இல்லாமல் இருந்தாள். அவளுக்கு திடீரென்று அழுகை பீறிட்டுக் கொண்டு வரும். இல்லையென்றால் பார்வை சுரத்தில்லமல் எந்த பொருளையாவது பார்த்த வண்ணம் இருக்கும்.

மிருக வைத்தியன் மீண்டும் குடும்பத்தோடு அந்த ஊரிற்கு வந்து சேர்ந்தான். வேலையை விட்டு விட்டு, கால்நடை பண்ணை ஒன்று ஆரம்பிக்கப் போவதாகவும் சொன்னான். ஜானு அவன் குடும்பத்திற்கு அவள் வீட்டைக் கொடுத்து விட்டு, வேப்பமரம் இருந்த இடத்தில் குடிசை ஒன்று போட்டுக் கொண்டாள். வைத்தியனின் மனைவியும், அவர்களது ஐந்து வயது மகன் சேஷாங்க்கும் அவள் வீட்டிற்கு வந்தார்கள். சேஷாங்க் ஜானுவின் பூனை பின்னால் ஓடினான். அந்த பூனை ஜானுவின் கால்கள் பின்னால் போய் நின்றது.

"அத்தை. அது உங்க பூனையா? நான் கொஞ்ச நேரம் அது கூட விளையாடட்டுமா?"

சேஷாங்க் ஐந்து வயதிற்கு இருக்க வேண்டிய உயரம் இல்லாமல் குட்டையாக இருந்தான். புசுபுசுவென்ற கன்னங்கள் அவனுக்கு. அவள் எதுவும் சொல்லும் முன் அவள் காலடியில் பாதுகாப்பு தேடிய பூனைய மேலும் துரத்தினான். அவன் ஓடும் போழுது சிரித்துக் கோண்டே ஓடினான். ஜானுவின் முகத்தில் பழைய சிரிப்பு மீண்டும் தோன்றியது. இது நாள் வரை ஜானுவை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று முறியத் தொடங்கியது. மாலை நேரத்தில் அவன் மேஜை முன் உட்கார்ந்து பாடங்களைப் படித்துக் கோண்டிருந்தபோது ஜானு சேஷாங்க்கையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

"ஒரு தீவு என்பது முழுவதுமாகத் தண்ணீரால் சூழப்பட்ட ஒரு சிறிய நிலப்பகுதி."

"ஒரு தீவு என்பது ஒரு சிறிய நிலப்பகுதி...." என்று ஜானு ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

ஜானுவுக்கென்று சொந்தக் கருத்துக்கள் மீண்டும் பிறந்தது. சேஷாங்கின் தாய் மீண்டும் சண்டைப் போட்டு ஓரேடியாக தாய் வீட்டிற்கு போய் விட்டாள். வைத்தியனும் மந்தையோடே பல நாள் இருந்து விடுவான். தனியாக விடப்பட்ட சேஷாங்க்கை ஜானு தான் பார்த்துக் கொண்டாள். சேஷாங்க் உயர்நிலைப் பள்ளிக்கு போக தொடங்கி விட்டான்.

"ஸ்கூலுக்கு நேரமாச்சு.. எழுந்திரு செல்லம்."
"கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடேன்" என்று கத்துவான் சேஷாங்க். ஜானுவிற்கு அவனை எழுப்புவது என்றால் மிக சங்கடமாக இருக்கும். கையை கழுத்துக்கடியில் வைத்து, கால்களை மடக்கி... அவன் தூங்குவதையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

ஒருவழியாக அவன் கிளம்பி பள்ளிக்குப் போகும் பொழுது, ஓசைப் படாமல் பின்னாலயே போவாள். பள்ளிக் கூடம் இருக்கும் தெருவை அடைந்ததும் சேஷாங்க் திரும்பி பார்த்து, "நீங்க இப்ப வீட்டுக்கு போ
போறீங்களா இல்லையா?" என்று கத்துவான். ஜானு ஓடி வந்து அவனுக்கு முத்தமிட்டு, கையிலிருக்கும் பழத்தையோ, சாக்லேட்ட்டையோ கொடுப்பாள். அவன் கண்களில் இருந்து மறையும் வரை அங்கயே நின்றிருப்பாள். பின்னர் கண்ணீர் துளிகளை துடைத்துக் கோன்டு கோயிலுக்கு செல்வாள். சேஷாங்க்கின் தாயார் சேஷங்கையும் அழைத்து போகக் கூடாது என கடவுளிடம் வேண்டி அதற்காக அழவும் செய்வாள். யாராவது தெரிந்தவர்கள் அவளிடம் பேசினால், அவளுக்கு உற்சாகம் வந்து விடும்.

"
பாவம்.. இப்பெல்லாம் ஸ்கூல் பசங்களுக்கு நிறைய எழுத தர்றாங்க. அப்புறம் அத படி, இத படின்னு வேற உயிர வாங்குறாங்க."
சனி, 15 ஆகஸ்ட், 2009

நாம் வாழும் ராஜ்யம்


சுதந்திரம் அவசியம் கிடைத்து தான் இருக்க வேண்டுமா என்று பலமுறை யோசித்து பார்த்தது உண்டு. சில ஆண்டுகள் கழித்து நமக்கு சுதந்திரம் கிடைத்திருந்தால், ஆங்கிலேயர்கள் செய்த தவறுகளை அவர்களே ஓரளவு சரி செய்து விட்டிருப்பார்காளோ என்று எண்ணி சர்ச்சிலின் தீர்க்க தரிசனத்தினை இன்று வியக்கிறேன்.

நமக்கு கிடைத்த சுதந்திரம் நம்மை எங்கே அழைத்து சென்றது, சென்றுக் கொண்டிருக்கிறது என்று யோசிப்பேன். அதை பிரதிபலிப்பது போல் உள்ளது "கூண்டுக்குள் நம்சுதந்திரம்" என்ற கவிதை. சுதந்திரத்தின் அருமை நமக்கு தெரியவில்லை என காந்தி அன்றே புத்திசாலித்தனமாக ஒதுங்கி விட்டார். அவர சொல்லனும்? சுயராஜ்யத்தை பற்றி சிலாகித்தார். இன்றோ சுயம் அற்றதாக உள்ளது அவர் இல்லாத நாம் வாழும் ராஜ்யம்.

வியாழன், 16 ஜூலை, 2009

"இங்க என்ன பண்றே ரகு?"

தெரியுமே! எப்படியும் ஏதாவது ஒன்னு ரெண்டு கரடி கண்ணுல மாட்டுவேன்னு.. ச்சே!

எல்லாம் நேத்து அவன பார்த்ததால் வந்தது வினை. எனக்கு ரெண்டு வருஷத்துக்கு பின்னாடி பொறந்த பையன் நேத்து கையில ஒரு குழந்தையோடயும், அதுக்கு முன்னாடி நாள் ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து மனைவின்னு அறிமுகப்படுத்துறான். அதான் இன்னைக்கு கையில ஒரு ரோஜா பூவோடு நிக்கிறேன். ரொம்ப நாளா யோசிச்சது தான். சரி இன்னைக்கு போட்டு உடைச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

"
விஷயமில்லாம் இந்த பக்கம் காத்தடிக்காதே!!"

"சும்மா தான். ஒரு ப்ரென்ட பார்க்கலாம்னு."

நமக்கு தெரிஞ்சவங்க ரொம்ப பேர் ஊர்ல இருப்பாங்க போலிருக்கு. சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கனும். இந்த ஊர்ல சும்மா நிக்கவே விட மாட்டேங்கிறாங்க. எங்கிருந்து காதலிக்கிறது?

"ஐ.. கையில பூவெல்லாம் வச்சிருக்க? பொண்ணுக்காக தான் வெயிட் பண்ற?"

"இல்ல. ப்ரென்ட்டுக்காக தான்."
"ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை..." என்று பாடிக் கொண்டே பையிலிருந்த வெண் சுருட்டு குழலை பற்ற வைத்த படியே, "எந்த பையன் இந்த விஷயத்தில் எல்லாம் உண்மைய சொல்வான்?" என்று கேட்டான்.

வந்த சனியன் என் பனியன தேடி போய் இறங்க ஆரம்பிச்சுடிச்சு.

"இரண்டு இலைய உன் கண்ணுல வச்சா ஆதவன் மறைய போவுது. இதுக்கு ஏன் ஆயிரம் கை வேணும். சரி.. சரி.. நான் வர்றேன்" என்று ரோஜா பூவை அவன் கையிலேயே கொடுத்து விட்டு என் அறைக்கு கிளம்பினேன்.

"எனக்கு.. எதுக்குடா பூவு? உன் டாவுக்கு கொடு. டேய்.. யாருன்னாவது சொல்லிட்டு போடா. இல்லன்னா என் தலையே வெடிச்சுடும்."

அடிக்கடி வர்ற சன் பிக்சர்சின் 'மாசிலாமணி' விளம்பரத்த விட இவன் பெரிய இம்சையா இருப்பான் போல.

என் ரூம் மேட் கோபமாக வந்து, "நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?" என்று கேட்டான்.

"ஏன் நீ எங்கிட்ட சொல்லவே இல்ல? யாருடா அது?"
நான் கொஞ்ச நேரம் மேல பார்த்து, கீழ பார்த்து அப்படியே வெட்கப்பட்ட மாதிரியே என் ரூம் மேட்ட பார்த்தேன்.

"டேய்.. இப்ப சொல்ல போறியா இல்லியா?"

"எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆளு தான். அதான்டா பஸ்ல போவுமே 'சென்ட் பாட்டல்'. அவ தான்" என்று செல்லமாக சிரித்தேன்.

"பொண்ண பத்தி யாருடா கேட்டா? யாருடா உன்ன கலாய்ச்சது! எதுவும் பேசாம வந்துட்டியாமே! நம்ம குரூப்புக்கே அவமானம்டா. போக்கிரித்தனமா திரியுற அழகிய திருமகனான உன் மேல ஒரு குருவி கக்கா போயிடுச்சுன்னு கேள்விப்பட்டதில் இருந்து வில்லு ஒன்ன கையில் வச்சிருக்கிற வேட்டைக்காரன் மாதிரி சுத்துறேன். சொல்லு யாருடா அவன்?"

'ஆஹா... இந்த ப்ரென்ட்சுங்களே இப்படி தான்.'

Blogged with the Flock Browser

ஞாயிறு, 12 ஜூலை, 2009

நட்டுவாகுயிலி

"அய்யே... ச்சீ விடு."

"சும்மா வாம்மே! மோதிரம் தர்றாங்களாம்."


(சென்னை
மாநகராட்சி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம் பரிசளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சுப்ப....... )