புதன், 2 டிசம்பர், 2009

பிரதிபலிப்பு

ஆன்டன் செகாவ் - 'சிறுகதைச் சக்கரவர்த்தி' என்று இலக்கிய மேதைகளால் செல்லமாக அழைக்கப்படுபவர். லியோ டால்ஸ்டாய் பெரிதும் பாராட்டிய செகாவ் அவர்களின் "டார்லிங்" என்ற சிறுகதையின் தழுவல் தான் எனது பிரதிபலிப்பு. இந்த கதையின் அடிநாதமாக வரும் களங்கமற்ற காதல் மனித இனம் அனைத்திற்குமே பொதுவானது.
("டார்லிங்" கதையை ஏற்கனவே படித்தவர்கள்.. மேலே படிக்க வேண்டாம்.)

***********************************

ஜானு ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகள். வீட்டின் பின் பக்கம் இருக்கும் வேப்பமரத்தடி நிழலில் உட்கார்ந்து காற்றின் ஈர பதத்தை உள் வாங்கியபடி யோசனையில் மூழ்கியிருந்தாள். அவளது சிந்தனையை வேலியின் பின்புறம் இருந்து வந்த குரல் கலைத்தது.

"ச்சே!! இன்னைக்குமா? என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறதுக்குன்னே இந்த மழை வந்து தொலைக்குது" என்று புலம்பினான் திறந்த வெளி நாடக அரங்கத்தின் மேலாளரான விமல்.

"பாத்தீங்களா ஜானு. என் பொழப்ப! என்ன பண்ணி என்ன புண்ணியம்? நல்ல கதை, இயல்பான் நடிகருங்க, தரமான இசை என என பார்த்து நிகழ்ச்சி நடத்தினாலும் பாதி கொட்ட தான் நிரம்பும். மத்தவன் மாதிரி கொச்சையாவோ, கோமளித்தனமாவோ எதாவது பண்ணா அங்க போய் விழுவானுங்க. இப்படி வெயில் காலத்துல தினமும் மழை பெஞ்சா என்னால என்ன செய்ய முடியும்?"

நேற்றும் இப்படி தான் வானம் பார்த்து பேசிக் கொண்டிருந்தான் விமல். பாவம் நாளைக்கும் இப்படி தான் பேசுவான். ஜானுவை ஒரு ஆழ்ந்த சோகம் சூழ்ந்து
க் கொண்டது. கண்களில் இருந்து நீர் வந்து விடும் போலிருந்தது. அவன் மீது இரக்கம் உண்டாகி காதலாக மலரும் போலிருந்தது. ஜானுவிற்கு யார் மீதாவது அக்கறை செலுத்த வேண்டும். அன்பு செலுத்தாமல் அவளால் இருக்க முடியாது. தொடக்க காலத்தில் அவள் தன் அப்பாவை நேசித்தாள். இப்போது அவள் அப்பா ஒரு இருட்டறையில் முடங்கி மூச்சு விடவே சிரமப்பட்டு கொன்டிருக்கார். ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவிற்கு வரும் அத்தையிடம் அன்பு செலுத்தியிருக்கிறாள். பத்தாம் வகுப்பில் தமிழ் எடுத்த மரகதம் டீச்சரை நேசித்திருக்கிறாள்.

'பரவாயில்ல்.. அழகா தான் இருக்கு' என்று அவளைப் பார்க்கும் ஆண்கள் பெருமூச்சு விடுவனர். 'என் செல்லம்' என்று பெண்கள் அவளது கன்னத்தை கிள்ளி எடுத்து திருஷ்டி எடுப்பார்கள்.

ஜானுவிற்கு பிறகு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை. மாலை வேளைகளில் மழை வரக் கூடாது என வேண்டிக் கொண்டாள். மக்களின் மட்டமான இலக்கிய ரசனைகள் குறித்து அவளது தோழிகளிடம் புலம்பினாள். அவள் தந்தை ஒருவாறு யூகித்து பக்கத்து வீட்டு விமலிற்கும், ஜானுவிற்கும் கல்யாணம் பண்ணி வைத்தார். விமலின் அலுவலகத்தில் உட்கார்ந்து கணக்குப் பார்த்தாள். நடிகர்களிடம் சிரித்துப் பேசினாள். கல்யாணமான சில மாதங்களிலே அவள் உடல் பருமனும், முகம் புது பொலிவும் அடைந்திருந்தது. மகிழ்ச்சியான இல்லற நாட்களைத் தொடர்ந்து, விமலுக்கு மஞ்சள் காமாலை வந்து மரணமடைந்தான்.

"ஐயோ!! உங்க ஜானு இப்ப தனியாயிட்டேனே, நெஞ்சு உடைஞ்சு போயிடும் போலிருக்கு" என்று அழுதாள். கோயில், குளம், தனிமை, இருட்டு என முடங்கி கிடந்தாலும் வந்து போறவர்கள் பரிதாபத்தின் பெயரால் அவளது துக்கத்தை அதிகப்படுத்தினர்.

ஆறு மாததிற்கு ஒரு நாள் காற்றில், ஜானு வீட்டு பின்னால் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்திருந்தது. அதை விலை பேச சக்திவேல் என்னும் மர வியாபாரி அவள் வீட்டிற்கு வந்திருந்தான். 'அருமையான மரம்' என்றான். அவளது சோகத்தை அவன் பொருட்படுத்தவில்லை. எது நல்ல மரம் எவை கெட்ட மரம் என்று கண்டுபிடிக்கும் வழியை ஜானுவிடம் சொன்னான். அவனது உற்சாகம் அவளைத் தொற்றிக் கொண்டது. பத்து நிமிடங்கள் தான் எனினும் சக்திவேல் நிறைய நேரம் பேசி விட்டு போனதாக ஜானுவிற்கு தோன்றியது. ஆறுதலாக எப்பவும் பேச வரும் பாட்டி, பேச்சு வாக்கில் மர வியாபாரியின் நல்ல குணத்தை பற்றிச் சொன்னாள். ஜானுவிற்கு சக்திவேலுவை பிடித்து தானிருந்தது. அவர்கள் இருவரும் மனமொத்தி கல்யாண பந்தத்தில் இணைந்தனர்.

மரம் வாங்க சக்திவேல் வெளியூர் சென்ற தினங்களில் எல்லாம், ஜானு தான் கடையில் அனைத்து வேலைகளையும் பார்த்தாள். ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள பிரத்யேக வாசனையைப் பற்றி அவள் பேசுவாள். தூண், உத்தரம், கழி, பலகை, விட்டம் போன்றவற்றிக்கு எந்த மரம் நல்லது என்று தெரிந்து வைத்திருந்தாள்.

"ஒவ்வொரு வருஷமும் மரத்தின் விலை ஏறத் தான் செய்யுது. ஆனா நல்ல மரம் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதற்காக எத்தனை இடம் ஏறி இறங்கனும் தெரியுமா?" என்று அதிசயத்தில் உறைவதுபோல் கன்னங்களைக் கைகளால் மூடிக் கொள்வாள் ஜானு.
"ஏன் எப்ப எப்ப பார்த்தாலும் மரம், மரம்ன்னே பினாத்துற? ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம ஊரில் நல்ல நாடகம் ஒன்னு போட்டிருக்காங்க. போலாமா?" என்று ஜானுவின் தோழி அழைத்தாள்.
"நாடகமா?? அதெல்லாம் வேலை இல்லாதவங்களுக்காக தான்னு அவர் சொல்லியிருக்காரு. எங்க ரெண்டு பேருக்கு தான் இங்க பார்க்க வேண்டிய வேலை எவ்வளவு இருக்கு" என்றாள் ஜானு.
ஆறு வருடம் மிக இனிமையாக கழிந்த வாழ்க்கை, மரம் வெட்டும் கத்தி தவறி சக்திவேலுவின் மேல் விழுந்து ஒரு முடிவிற்கு வந்தது.

வாழ்க்கையே சூனியமான ஜானு தன் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு நிற உடைகளை மட்டுமே அணிய ஆரம்பித்தாள். எதன் பொருட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்தாள். ஜன்னல் கதவுகளை கூட திறக்க மனமில்லாமல் மிகவும் முடங்கி இருந்தாள். எட்டு மாதங்கள் ஆகியும் அவள் மனதில் இருந்து துக்கம் சிறிதும் குறையவில்லை. இந்த எட்டு மாதங்களும் அவளுடன் இருந்த பூனைக்கு இரண்டு நாட்களாக உடம்பிற்கு முடியவில்லை. அதை எடுத்துக் கொண்டு மிருக வைத்தியனிடம் போனாள் ஜானு.

அந்த மிருக வைத்தியனை அவளுக்கு முன்னமே தெரியும். மரம் வாங்குவதற்காக சில முறை வந்திருக்கிறான். இவன் மீது சந்தேகம் கொண்டு அவன் மனைவி அவளது தாய் வீட்டிற்கு எப்பொழுதோ சென்று விட்டிருந்தாள். ஜானுவிற்கு அவன் தனியாக மிக கஷ்டப்படுவதாக தோன்றியது. அடிக்கடி அவனை அதன் பிறகு பார்க்க வந்தாள்.

காய்கறி வாங்கப் போன இடத்தில், "நம்ம ஊர்ல சரியான மிருகப் பராமரிப்பே இல்ல. அதான் எல்லா தொத்து நோயுங்களுக்கும் காரணம்" என்று தெரிந்தவர்களிடம் சொன்னாள். ஆடுமாடுகளைத் தாக்கும் கணை நோய்களை பற்றி அவள் அடுக்கடுக்காக பேசுவாள். ஊராட்சிக்குச் சொந்தமான கசாப்புக் கடைகளின் ஓழுங்கீனங்களைப் பற்றியும் பேசுவாள்.

"உனக்குப் புரியாத விஷயங்களைப் பற்றி பேசாதன்னு எத்கன முறை சொல்லியிருக்கேன்?" என்று கோபப்பட்டான் வைத்தியன்.
"அப்ப.. நான் எதை பத்தி பேசுறது?" என அழுவாள் ஜானு. தன் மீது கோபப்படாதிருக்கும்படி கெஞ்சுவாள்.

ஆனால் அவளை சோகத்தில் மூழ்கடித்து விட்டு மிருக வைத்தியன் வேறு ஊரிற்கு மாற்றலாகி சென்றான். ஜானு இப்போது முற்றிலும் தன்னந்தனி ஆள். உண்பது, உறங்குவது என எது செய்தாலும் அவள் மனம் அதில் ஓட்டாமல் ஒரு இயந்திர தன்மை அவளுள் குடிக்கொண்டது. அவளுக்கென்று தனி அபிப்ராயம் எதுவும் இல்லாமல் இருந்தாள். அவளுக்கு திடீரென்று அழுகை பீறிட்டுக் கொண்டு வரும். இல்லையென்றால் பார்வை சுரத்தில்லமல் எந்த பொருளையாவது பார்த்த வண்ணம் இருக்கும்.

மிருக வைத்தியன் மீண்டும் குடும்பத்தோடு அந்த ஊரிற்கு வந்து சேர்ந்தான். வேலையை விட்டு விட்டு, கால்நடை பண்ணை ஒன்று ஆரம்பிக்கப் போவதாகவும் சொன்னான். ஜானு அவன் குடும்பத்திற்கு அவள் வீட்டைக் கொடுத்து விட்டு, வேப்பமரம் இருந்த இடத்தில் குடிசை ஒன்று போட்டுக் கொண்டாள். வைத்தியனின் மனைவியும், அவர்களது ஐந்து வயது மகன் சேஷாங்க்கும் அவள் வீட்டிற்கு வந்தார்கள். சேஷாங்க் ஜானுவின் பூனை பின்னால் ஓடினான். அந்த பூனை ஜானுவின் கால்கள் பின்னால் போய் நின்றது.

"அத்தை. அது உங்க பூனையா? நான் கொஞ்ச நேரம் அது கூட விளையாடட்டுமா?"

சேஷாங்க் ஐந்து வயதிற்கு இருக்க வேண்டிய உயரம் இல்லாமல் குட்டையாக இருந்தான். புசுபுசுவென்ற கன்னங்கள் அவனுக்கு. அவள் எதுவும் சொல்லும் முன் அவள் காலடியில் பாதுகாப்பு தேடிய பூனைய மேலும் துரத்தினான். அவன் ஓடும் போழுது சிரித்துக் கோண்டே ஓடினான். ஜானுவின் முகத்தில் பழைய சிரிப்பு மீண்டும் தோன்றியது. இது நாள் வரை ஜானுவை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று முறியத் தொடங்கியது. மாலை நேரத்தில் அவன் மேஜை முன் உட்கார்ந்து பாடங்களைப் படித்துக் கோண்டிருந்தபோது ஜானு சேஷாங்க்கையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

"ஒரு தீவு என்பது முழுவதுமாகத் தண்ணீரால் சூழப்பட்ட ஒரு சிறிய நிலப்பகுதி."

"ஒரு தீவு என்பது ஒரு சிறிய நிலப்பகுதி...." என்று ஜானு ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

ஜானுவுக்கென்று சொந்தக் கருத்துக்கள் மீண்டும் பிறந்தது. சேஷாங்கின் தாய் மீண்டும் சண்டைப் போட்டு ஓரேடியாக தாய் வீட்டிற்கு போய் விட்டாள். வைத்தியனும் மந்தையோடே பல நாள் இருந்து விடுவான். தனியாக விடப்பட்ட சேஷாங்க்கை ஜானு தான் பார்த்துக் கொண்டாள். சேஷாங்க் உயர்நிலைப் பள்ளிக்கு போக தொடங்கி விட்டான்.

"ஸ்கூலுக்கு நேரமாச்சு.. எழுந்திரு செல்லம்."
"கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடேன்" என்று கத்துவான் சேஷாங்க். ஜானுவிற்கு அவனை எழுப்புவது என்றால் மிக சங்கடமாக இருக்கும். கையை கழுத்துக்கடியில் வைத்து, கால்களை மடக்கி... அவன் தூங்குவதையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

ஒருவழியாக அவன் கிளம்பி பள்ளிக்குப் போகும் பொழுது, ஓசைப் படாமல் பின்னாலயே போவாள். பள்ளிக் கூடம் இருக்கும் தெருவை அடைந்ததும் சேஷாங்க் திரும்பி பார்த்து, "நீங்க இப்ப வீட்டுக்கு போ
போறீங்களா இல்லையா?" என்று கத்துவான். ஜானு ஓடி வந்து அவனுக்கு முத்தமிட்டு, கையிலிருக்கும் பழத்தையோ, சாக்லேட்ட்டையோ கொடுப்பாள். அவன் கண்களில் இருந்து மறையும் வரை அங்கயே நின்றிருப்பாள். பின்னர் கண்ணீர் துளிகளை துடைத்துக் கோன்டு கோயிலுக்கு செல்வாள். சேஷாங்க்கின் தாயார் சேஷங்கையும் அழைத்து போகக் கூடாது என கடவுளிடம் வேண்டி அதற்காக அழவும் செய்வாள். யாராவது தெரிந்தவர்கள் அவளிடம் பேசினால், அவளுக்கு உற்சாகம் வந்து விடும்.

"
பாவம்.. இப்பெல்லாம் ஸ்கூல் பசங்களுக்கு நிறைய எழுத தர்றாங்க. அப்புறம் அத படி, இத படின்னு வேற உயிர வாங்குறாங்க."




சனி, 15 ஆகஸ்ட், 2009

நாம் வாழும் ராஜ்யம்


சுதந்திரம் அவசியம் கிடைத்து தான் இருக்க வேண்டுமா என்று பலமுறை யோசித்து பார்த்தது உண்டு. சில ஆண்டுகள் கழித்து நமக்கு சுதந்திரம் கிடைத்திருந்தால், ஆங்கிலேயர்கள் செய்த தவறுகளை அவர்களே ஓரளவு சரி செய்து விட்டிருப்பார்காளோ என்று எண்ணி சர்ச்சிலின் தீர்க்க தரிசனத்தினை இன்று வியக்கிறேன்.

நமக்கு கிடைத்த சுதந்திரம் நம்மை எங்கே அழைத்து சென்றது, சென்றுக் கொண்டிருக்கிறது என்று யோசிப்பேன். அதை பிரதிபலிப்பது போல் உள்ளது "கூண்டுக்குள் நம்சுதந்திரம்" என்ற கவிதை. சுதந்திரத்தின் அருமை நமக்கு தெரியவில்லை என காந்தி அன்றே புத்திசாலித்தனமாக ஒதுங்கி விட்டார். அவர சொல்லனும்? சுயராஜ்யத்தை பற்றி சிலாகித்தார். இன்றோ சுயம் அற்றதாக உள்ளது அவர் இல்லாத நாம் வாழும் ராஜ்யம்.

வியாழன், 16 ஜூலை, 2009

"இங்க என்ன பண்றே ரகு?"

தெரியுமே! எப்படியும் ஏதாவது ஒன்னு ரெண்டு கரடி கண்ணுல மாட்டுவேன்னு.. ச்சே!

எல்லாம் நேத்து அவன பார்த்ததால் வந்தது வினை. எனக்கு ரெண்டு வருஷத்துக்கு பின்னாடி பொறந்த பையன் நேத்து கையில ஒரு குழந்தையோடயும், அதுக்கு முன்னாடி நாள் ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து மனைவின்னு அறிமுகப்படுத்துறான். அதான் இன்னைக்கு கையில ஒரு ரோஜா பூவோடு நிக்கிறேன். ரொம்ப நாளா யோசிச்சது தான். சரி இன்னைக்கு போட்டு உடைச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

"
விஷயமில்லாம் இந்த பக்கம் காத்தடிக்காதே!!"

"சும்மா தான். ஒரு ப்ரென்ட பார்க்கலாம்னு."

நமக்கு தெரிஞ்சவங்க ரொம்ப பேர் ஊர்ல இருப்பாங்க போலிருக்கு. சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கனும். இந்த ஊர்ல சும்மா நிக்கவே விட மாட்டேங்கிறாங்க. எங்கிருந்து காதலிக்கிறது?

"ஐ.. கையில பூவெல்லாம் வச்சிருக்க? பொண்ணுக்காக தான் வெயிட் பண்ற?"

"இல்ல. ப்ரென்ட்டுக்காக தான்."
"ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை..." என்று பாடிக் கொண்டே பையிலிருந்த வெண் சுருட்டு குழலை பற்ற வைத்த படியே, "எந்த பையன் இந்த விஷயத்தில் எல்லாம் உண்மைய சொல்வான்?" என்று கேட்டான்.

வந்த சனியன் என் பனியன தேடி போய் இறங்க ஆரம்பிச்சுடிச்சு.

"இரண்டு இலைய உன் கண்ணுல வச்சா ஆதவன் மறைய போவுது. இதுக்கு ஏன் ஆயிரம் கை வேணும். சரி.. சரி.. நான் வர்றேன்" என்று ரோஜா பூவை அவன் கையிலேயே கொடுத்து விட்டு என் அறைக்கு கிளம்பினேன்.

"எனக்கு.. எதுக்குடா பூவு? உன் டாவுக்கு கொடு. டேய்.. யாருன்னாவது சொல்லிட்டு போடா. இல்லன்னா என் தலையே வெடிச்சுடும்."

அடிக்கடி வர்ற சன் பிக்சர்சின் 'மாசிலாமணி' விளம்பரத்த விட இவன் பெரிய இம்சையா இருப்பான் போல.

என் ரூம் மேட் கோபமாக வந்து, "நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?" என்று கேட்டான்.

"ஏன் நீ எங்கிட்ட சொல்லவே இல்ல? யாருடா அது?"
நான் கொஞ்ச நேரம் மேல பார்த்து, கீழ பார்த்து அப்படியே வெட்கப்பட்ட மாதிரியே என் ரூம் மேட்ட பார்த்தேன்.

"டேய்.. இப்ப சொல்ல போறியா இல்லியா?"

"எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆளு தான். அதான்டா பஸ்ல போவுமே 'சென்ட் பாட்டல்'. அவ தான்" என்று செல்லமாக சிரித்தேன்.

"பொண்ண பத்தி யாருடா கேட்டா? யாருடா உன்ன கலாய்ச்சது! எதுவும் பேசாம வந்துட்டியாமே! நம்ம குரூப்புக்கே அவமானம்டா. போக்கிரித்தனமா திரியுற அழகிய திருமகனான உன் மேல ஒரு குருவி கக்கா போயிடுச்சுன்னு கேள்விப்பட்டதில் இருந்து வில்லு ஒன்ன கையில் வச்சிருக்கிற வேட்டைக்காரன் மாதிரி சுத்துறேன். சொல்லு யாருடா அவன்?"

'ஆஹா... இந்த ப்ரென்ட்சுங்களே இப்படி தான்.'





Blogged with the Flock Browser

ஞாயிறு, 12 ஜூலை, 2009

நட்டுவாகுயிலி

"அய்யே... ச்சீ விடு."

"சும்மா வாம்மே! மோதிரம் தர்றாங்களாம்."


(சென்னை
மாநகராட்சி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம் பரிசளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சுப்ப....... )

செவ்வாய், 7 ஜூலை, 2009

ஆடலரசி

அவளுக்காக தினமும் காத்திருப்பேன். அவளோட அலங்கல், குலங்கல பாக்கிறதக்கே ஆயிரம் கண்கள் வேண்டும். அவ இல்லாம நான் இல்லைன்னு சொல்ற அளவுக்கு என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்த உண்டு பண்ணிட்டா. என்னை மாதிரியே பலருக்கும் அவ ரொம்ப முக்கியம். எப்பவும் பெரிய கூட்டத்தோடு தான் வருவா. தான் வர்றத தூரத்திலியே ஒரு அழகான அதிர் சிரிப்பால் உணர்த்திடுவா. உடனே நான் உஷாராயிடுவேன். ஆனா எனக்கு முன்னாடி பல பேர் முந்தி அடிச்சுக்கிட்டு அவள பிடிக்கறதுக்கு நிப்பாங்க.


அவகிட்ட பாட்டுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அந்த பாட்டுக்காகவே சில பேர் அவ கூட்டத்தில் இருப்பாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு நானும் எப்படியோ அவளின் கூட்டத்தில் இடம் பிடித்து விடுவேன். அவக்கிட்ட எனக்கு பிடிச்சது, எத்தன பேர் வந்தாலும் எல்லாரையும் அரவணைச்சிப்பா... ரொம்ப நல்லவ. ஆனா எனக்கு தான் சில சமயம் எரிச்சலா இருக்கும். அது பொறாமையா கூட இருக்கலாம். இத்தன பேர்(என்னையும் சேர்த்து).. அவளை பாடாய் படுத்தின அவ தாங்குவாளான்னு, அவ மேல சாய்ந்துக் கொண்டு யோசிப்பேன். யாருக்கும் இல்லாத அக்கற எனக்கு மட்டும் ஏனென யோசிப்பதை விட்டு விடுவேன்.


அவகிட்ட எனக்கு பிடிக்காத விஷயம்.. வலுக்கட்டாயமாக என்னை என் கடமையினை செய்வதற்காக புறக்கணித்து விடுவாள். அது கூட..பரவாயில்லை. என் இடத்தை நிரப்புவதற்காக வேறு ஒருவனை அவளோடு சேர்த்துக் கொள்வாள். 'போடி.. நீ இல்லைன்னா இன்னொருத்தி' என்று கோபத்தில் அவளைப் பார்த்து கோபப்படுவேன். ஆனால் அடுத்த நாள் மீண்டும் அவளைப் பிடித்து தொங்க தான் வேண்டும்.

ஏன்னா.. அவ எனக்கு ரொம்ப முக்கியம்.


குறிப்பு: தினமும் 'நடனராணி' என்ற பேருந்தில் தான் தொழில்நுட்ப கல்லூரிக்கு செல்வேன்.

புதன், 10 ஜூன், 2009

தமிழர் போக்கு

"யாரு?? ஓ..நீங்களா! உங்கள இன்னைக்கா வர சொல்லி இருந்தேன். நீங்க எதுக்கும் இரண்டு நாளுக்கு அப்புறம் வந்து பாருங்களேன்" என்று பத்தாவது முறையாக போன பொழுது இருபது நிமிடம் காக்க வைத்து விட்டு கிடைத்த பதில். 
 
இது சில தமிழர்களின் பதில்.

*************************

Hi!

Today I have downloaded the app, installed and run it. Next, I have explored it mindfully, to become familiar with it. Overall, it seems good - the most important features are OK; although I will suggest you some new features, soon (in order to become even better). I made a search for other apps of the same kind ("competitors") - usually I do this - I try different apps of the same kind to see the features of each one, and then I can imagine the "ideal" app (the merging of all the best features). On the other hand, I know what doctors need to use most, so, I may even suggest new features not existing on the competitors.
If you want to give a look, here are the best competitors I found:

http://www.med-sites.com/
http://www.encoreeservices.com/
http://www.patientos.org/

You may "try and spy" these apps by yourself; anyway I will present to you my personal analysis and suggest really useful new features for the app you are developing. I have about 3 hours of free time daily, so I will make this work progressively; whenever I have new ideas I will send you an email (suggesting new features and improvements). I think tomorrow I will be able to send you news.

Best regards,
Andre Garcia

இது ஸ்பெயின் மருத்துவரின் மின்னஞ்சல்.

*************************

தமிழர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட தான் ஆசை. அதற்கான தகுதிகள் நம்மிடம் உள்ளனவா என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு, இப்பொழுது வந்தாரை காக்க வைக்கும் தமிழ் நாடாக உள்ளது. காக்க வைப்பதற்கான காரணங்கள் நியாயமாக இருந்தாலும் பரவாயில்லை. தாமதமாக வருவது, காக்க வைப்பது தான் இன்றைய தமிழர்களின் புது யுக பெரிய மனித தனம் ஆகி விட்டது. இந்த போலித்தனம் எங்கே எவரிடம் இருந்து வந்தது.  

அரசியல்வாதிகளா? தமிழ் திரைப்படங்களா? இல்லை.. தமிழர்களே ப்படி தானா?



சனி, 6 ஜூன், 2009

அது என்ன... காதல்!

யார பார்த்தாலும் நான் அவ காதலிக்கிறேன், இவன காதலிக்கிறேன் என்று சொல்றாங்க. ஆனா.. எனக்கு இந்த காதல் மட்டும் ஒரு புரியாத விஷயாமாகவே இருக்கு. ஏன் எரிச்சலா கூட தான் இருக்கு? இத சொன்னா என்னை இதயம் இல்லாதவன் என்று சொல்றாங்க.

சரி காதல் என்ற வார்த்தைக்கு இலக்கண இலக்கியத்தில் பொருள் தேடி, ஓலைச் சுவடி எல்லாம் கூட ஒன்றிரண்டு புரட்டினேன். காதல் என்பது பெரும்பாலும் வினைச் சொல்லாகவும்(verb), சில இடத்தில் பெயர்ச் சொல்லாகவும்(noun) உபயோகிக்கப் படுகிறது.

ஓடுபவன் -ஓடுகிறவர்களை குறிக்கின்றது. சாப்பிடுகிறவன் - சாப்பிடுபவர்களை குறிக்கின்றது. காதலன் -காதலிப்பவர்களை குறிக்க வேண்டும் அல்லவா.. ஆனால்? "அவன் தான் என் காதலன்" என்றல்லவா சொல்கிறோம். சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள் மீண்டும் படியுங்கள். "அவன் தான் என் சாப்பிடுகிறவன்/ஓடுபவன்" என்பது எவ்வளவு முட்டாள் தனமான வாக்கியமாக படுகிறது. "நான் தான் காதலன்/காதலி" என்று சொல்லுவது தான் சரியான பதம். 

சரி.. 'காதலித்து தொலையட்டும்' விடலாம் என்று பார்த்தால், காதலிப்பவர்களின் கூத்தை தாங்க முடியவில்லை. எவ்வவு சுயநலம்? காதலிக்கிறோம் என்று சொல்லுபவர்கள் எல்லாம் பெரிய அயோக்கியர்கள் என்று நான் சொன்னால், சாலையில் நடமாட என்னை உயிருடன் விட மாட்டார்கள். அதனால் நான் எதுவும் சொல்லவில்லை. "வாடிய பயிரை கண்ட போதெல்லாம்...." என்று செடிகளின் மீதெல்லாம் காதல் கொண்டு உருகினாரே அவர் சிறந்த காதலன். தொழு நோயாளிகளை காதலோடு அணைத்து அரவணைத்தாரே அவர் சிறந்த காதலி. மற்றவர்கள்? அழகான பெண்ணை காதலிப்பவர்கள், பணக்காரனை காதலிப்பவர்கள், நல்ல குணம் படைத்தவளை காதலிப்பவர்கள், குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பவனை காதலிக்கிறவர்கள்.... இப்படி ஏதாவதொரு சுயநல காரணத்தோடு ஏற்படுவதின் பெயர் காதலா? சற்றே யோசியுங்கள்.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் காதலன் தான். சூரியன் ஓளியினை சுற்றி உள்ள அனைத்தின் மீதும் பட விடுவது போல, ஒவ்வொரு மனிதனும் சுற்றி உள்ள அனைவரையும் காதலிக்க வேண்டியவன். ஆனால் பண்பட்ட சிலராலே அது இயலுகிறது. மற்றவர்களால் பண்பட முடியவில்லை, காதலின் மகத்துவத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்பது கூட பரவாயில்லை. காட்டாறு போன்ற ஒரு விஷயத்தை உள்ளங்கையில் அடங்கும் சிறிய துளியாக்கி அதையும் கிடைத்தற்கரிய ஒன்றாக ஏந்து ஏந்து என்று ஏந்துகிறார்கள்.

வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுக்கும் புத்திசாலிதனத்தை(சுயநலத்தை) "காதல்" என்று சொல்லி சிறுமைப் படுத்துவதா? சரி இந்த பாழும் சுயநலத்திலாவது ஒரு ஒழுங்கு இருக்கிறதா? பசி, தாகம், காமம் போன்று காதலும் ஒரு உணர்வு என்று சொல்லுகிறார்கள். இயற்கையாக எழும் உணர்வினை வெளிப்படுத்த "காதலர் தினம்" வரை காத்திருக்கிறார்கள். அந்த தினத்தில் மட்டும் தான் காதல் மனதில் எழுமோ! மற்ற தினத்தில்?

ஒன்னுமே புரிய மாட்டேங்குது. தயவு செய்து யாராவது எனக்கு புரிய வையுங்களேன்.

வெள்ளி, 5 ஜூன், 2009

ரத்தத்தின் ரத்தமே

"ஏன்டாப்பா சின்னவனே.... நான் பண்ண பாவம் தான் என் வாரிசுகளுக்கு தமிழ் நாட்ட மட்டும் தான் பிரிச்சு கொடுக்க முடிஞ்சுது. என் வயசை கூட பொருட்படுத்தாம, ரொம்ப அலைகழிச்சு போன போவுதுன்னு மூனு பதவி. அதலயும் ஒன்னு நம்ம ஜால்ரா ஒன்னுக்கு போயிடுச்சு. இந்த நிலைமை இதோட முடிஞ்சிடனும். எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்லை. ஆனா கடவுள் என் மேல நம்பிக்கை வச்சு தான், தமிழகத்த எனக்கு கொடுத்தாரு. அவரோடைய நம்பிக்கைய காப்பாத்துற மாதிரி, நாம எல்லாம் நடந்துக்கனும். என் பேர பசங்க எல்லாருக்கும் உன் காலத்துகுள்ள இந்தியவா பிரிச்சு கொடுத்திடு. நம்ம மேல ஒருத்தர் வச்ச நம்பிக்கைய நாம காப்பத்தனும் இல்ல. அதுவும் அது கடவுளா இருக்கிறப்ப?"