செவ்வாய், 7 ஜூலை, 2009

ஆடலரசி

அவளுக்காக தினமும் காத்திருப்பேன். அவளோட அலங்கல், குலங்கல பாக்கிறதக்கே ஆயிரம் கண்கள் வேண்டும். அவ இல்லாம நான் இல்லைன்னு சொல்ற அளவுக்கு என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்த உண்டு பண்ணிட்டா. என்னை மாதிரியே பலருக்கும் அவ ரொம்ப முக்கியம். எப்பவும் பெரிய கூட்டத்தோடு தான் வருவா. தான் வர்றத தூரத்திலியே ஒரு அழகான அதிர் சிரிப்பால் உணர்த்திடுவா. உடனே நான் உஷாராயிடுவேன். ஆனா எனக்கு முன்னாடி பல பேர் முந்தி அடிச்சுக்கிட்டு அவள பிடிக்கறதுக்கு நிப்பாங்க.


அவகிட்ட பாட்டுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அந்த பாட்டுக்காகவே சில பேர் அவ கூட்டத்தில் இருப்பாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு நானும் எப்படியோ அவளின் கூட்டத்தில் இடம் பிடித்து விடுவேன். அவக்கிட்ட எனக்கு பிடிச்சது, எத்தன பேர் வந்தாலும் எல்லாரையும் அரவணைச்சிப்பா... ரொம்ப நல்லவ. ஆனா எனக்கு தான் சில சமயம் எரிச்சலா இருக்கும். அது பொறாமையா கூட இருக்கலாம். இத்தன பேர்(என்னையும் சேர்த்து).. அவளை பாடாய் படுத்தின அவ தாங்குவாளான்னு, அவ மேல சாய்ந்துக் கொண்டு யோசிப்பேன். யாருக்கும் இல்லாத அக்கற எனக்கு மட்டும் ஏனென யோசிப்பதை விட்டு விடுவேன்.


அவகிட்ட எனக்கு பிடிக்காத விஷயம்.. வலுக்கட்டாயமாக என்னை என் கடமையினை செய்வதற்காக புறக்கணித்து விடுவாள். அது கூட..பரவாயில்லை. என் இடத்தை நிரப்புவதற்காக வேறு ஒருவனை அவளோடு சேர்த்துக் கொள்வாள். 'போடி.. நீ இல்லைன்னா இன்னொருத்தி' என்று கோபத்தில் அவளைப் பார்த்து கோபப்படுவேன். ஆனால் அடுத்த நாள் மீண்டும் அவளைப் பிடித்து தொங்க தான் வேண்டும்.

ஏன்னா.. அவ எனக்கு ரொம்ப முக்கியம்.


குறிப்பு: தினமும் 'நடனராணி' என்ற பேருந்தில் தான் தொழில்நுட்ப கல்லூரிக்கு செல்வேன்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

சதங்கா (Sathanga) சொன்னது…

//பெரிய கூட்டத்தோடு தான் வருவா. தான் வர்றத தூரத்திலியே ஒரு அழகான அதிர் சிரிப்பால் உணர்த்திடுவா. //

இது அழகு ...

//ஆனா எனக்கு முன்னாடி பல பேர் முந்தி அடிச்சுக்கிட்டு அவள பிடிக்கறதுக்கு நிப்பாங்க.//

வாசிப்பவருக்கு இங்க ஒரு ப்ரேக் அடிக்கும்.

வித்தியாசமாக விவரித்த கதை போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

தினேஷ் ராம் சொன்னது…

நன்றி சதாங்கரே!

ஆனால் இது போட்டிக்காக இல்லை. எனினும் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி.