வியாழன், 16 ஜூலை, 2009

"இங்க என்ன பண்றே ரகு?"

தெரியுமே! எப்படியும் ஏதாவது ஒன்னு ரெண்டு கரடி கண்ணுல மாட்டுவேன்னு.. ச்சே!

எல்லாம் நேத்து அவன பார்த்ததால் வந்தது வினை. எனக்கு ரெண்டு வருஷத்துக்கு பின்னாடி பொறந்த பையன் நேத்து கையில ஒரு குழந்தையோடயும், அதுக்கு முன்னாடி நாள் ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து மனைவின்னு அறிமுகப்படுத்துறான். அதான் இன்னைக்கு கையில ஒரு ரோஜா பூவோடு நிக்கிறேன். ரொம்ப நாளா யோசிச்சது தான். சரி இன்னைக்கு போட்டு உடைச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

"
விஷயமில்லாம் இந்த பக்கம் காத்தடிக்காதே!!"

"சும்மா தான். ஒரு ப்ரென்ட பார்க்கலாம்னு."

நமக்கு தெரிஞ்சவங்க ரொம்ப பேர் ஊர்ல இருப்பாங்க போலிருக்கு. சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கனும். இந்த ஊர்ல சும்மா நிக்கவே விட மாட்டேங்கிறாங்க. எங்கிருந்து காதலிக்கிறது?

"ஐ.. கையில பூவெல்லாம் வச்சிருக்க? பொண்ணுக்காக தான் வெயிட் பண்ற?"

"இல்ல. ப்ரென்ட்டுக்காக தான்."
"ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை..." என்று பாடிக் கொண்டே பையிலிருந்த வெண் சுருட்டு குழலை பற்ற வைத்த படியே, "எந்த பையன் இந்த விஷயத்தில் எல்லாம் உண்மைய சொல்வான்?" என்று கேட்டான்.

வந்த சனியன் என் பனியன தேடி போய் இறங்க ஆரம்பிச்சுடிச்சு.

"இரண்டு இலைய உன் கண்ணுல வச்சா ஆதவன் மறைய போவுது. இதுக்கு ஏன் ஆயிரம் கை வேணும். சரி.. சரி.. நான் வர்றேன்" என்று ரோஜா பூவை அவன் கையிலேயே கொடுத்து விட்டு என் அறைக்கு கிளம்பினேன்.

"எனக்கு.. எதுக்குடா பூவு? உன் டாவுக்கு கொடு. டேய்.. யாருன்னாவது சொல்லிட்டு போடா. இல்லன்னா என் தலையே வெடிச்சுடும்."

அடிக்கடி வர்ற சன் பிக்சர்சின் 'மாசிலாமணி' விளம்பரத்த விட இவன் பெரிய இம்சையா இருப்பான் போல.

என் ரூம் மேட் கோபமாக வந்து, "நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?" என்று கேட்டான்.

"ஏன் நீ எங்கிட்ட சொல்லவே இல்ல? யாருடா அது?"
நான் கொஞ்ச நேரம் மேல பார்த்து, கீழ பார்த்து அப்படியே வெட்கப்பட்ட மாதிரியே என் ரூம் மேட்ட பார்த்தேன்.

"டேய்.. இப்ப சொல்ல போறியா இல்லியா?"

"எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆளு தான். அதான்டா பஸ்ல போவுமே 'சென்ட் பாட்டல்'. அவ தான்" என்று செல்லமாக சிரித்தேன்.

"பொண்ண பத்தி யாருடா கேட்டா? யாருடா உன்ன கலாய்ச்சது! எதுவும் பேசாம வந்துட்டியாமே! நம்ம குரூப்புக்கே அவமானம்டா. போக்கிரித்தனமா திரியுற அழகிய திருமகனான உன் மேல ஒரு குருவி கக்கா போயிடுச்சுன்னு கேள்விப்பட்டதில் இருந்து வில்லு ஒன்ன கையில் வச்சிருக்கிற வேட்டைக்காரன் மாதிரி சுத்துறேன். சொல்லு யாருடா அவன்?"

'ஆஹா... இந்த ப்ரென்ட்சுங்களே இப்படி தான்.'





Blogged with the Flock Browser

ஞாயிறு, 12 ஜூலை, 2009

நட்டுவாகுயிலி

"அய்யே... ச்சீ விடு."

"சும்மா வாம்மே! மோதிரம் தர்றாங்களாம்."


(சென்னை
மாநகராட்சி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம் பரிசளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சுப்ப....... )

செவ்வாய், 7 ஜூலை, 2009

ஆடலரசி

அவளுக்காக தினமும் காத்திருப்பேன். அவளோட அலங்கல், குலங்கல பாக்கிறதக்கே ஆயிரம் கண்கள் வேண்டும். அவ இல்லாம நான் இல்லைன்னு சொல்ற அளவுக்கு என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்த உண்டு பண்ணிட்டா. என்னை மாதிரியே பலருக்கும் அவ ரொம்ப முக்கியம். எப்பவும் பெரிய கூட்டத்தோடு தான் வருவா. தான் வர்றத தூரத்திலியே ஒரு அழகான அதிர் சிரிப்பால் உணர்த்திடுவா. உடனே நான் உஷாராயிடுவேன். ஆனா எனக்கு முன்னாடி பல பேர் முந்தி அடிச்சுக்கிட்டு அவள பிடிக்கறதுக்கு நிப்பாங்க.


அவகிட்ட பாட்டுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அந்த பாட்டுக்காகவே சில பேர் அவ கூட்டத்தில் இருப்பாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு நானும் எப்படியோ அவளின் கூட்டத்தில் இடம் பிடித்து விடுவேன். அவக்கிட்ட எனக்கு பிடிச்சது, எத்தன பேர் வந்தாலும் எல்லாரையும் அரவணைச்சிப்பா... ரொம்ப நல்லவ. ஆனா எனக்கு தான் சில சமயம் எரிச்சலா இருக்கும். அது பொறாமையா கூட இருக்கலாம். இத்தன பேர்(என்னையும் சேர்த்து).. அவளை பாடாய் படுத்தின அவ தாங்குவாளான்னு, அவ மேல சாய்ந்துக் கொண்டு யோசிப்பேன். யாருக்கும் இல்லாத அக்கற எனக்கு மட்டும் ஏனென யோசிப்பதை விட்டு விடுவேன்.


அவகிட்ட எனக்கு பிடிக்காத விஷயம்.. வலுக்கட்டாயமாக என்னை என் கடமையினை செய்வதற்காக புறக்கணித்து விடுவாள். அது கூட..பரவாயில்லை. என் இடத்தை நிரப்புவதற்காக வேறு ஒருவனை அவளோடு சேர்த்துக் கொள்வாள். 'போடி.. நீ இல்லைன்னா இன்னொருத்தி' என்று கோபத்தில் அவளைப் பார்த்து கோபப்படுவேன். ஆனால் அடுத்த நாள் மீண்டும் அவளைப் பிடித்து தொங்க தான் வேண்டும்.

ஏன்னா.. அவ எனக்கு ரொம்ப முக்கியம்.


குறிப்பு: தினமும் 'நடனராணி' என்ற பேருந்தில் தான் தொழில்நுட்ப கல்லூரிக்கு செல்வேன்.